Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
350 சர்வதேச விக்கெட்டுகள்.. பாகிஸ்தானுக்கு எதிராக உலகசாதனை படைத்த தீப்தி சர்மா!

350 சர்வதேச விக்கெட்டுகள்.. பாகிஸ்தானுக்கு எதிராக உலகசாதனை படைத்த தீப்தி சர்மா!

ங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி.

171 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தபோது, தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மாவால் 17 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

4 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மா, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய பவுலரின் சிந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.

 தீப்தி சர்மா

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கடந்து மாபெரும் மைல்கல்லை எட்டினார். கோஸ்வாமிக்கு பிறகு 350 விக்கெட்டுகளை கடந்த 2வது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா.

அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக உலகசாதனை படைத்தார் தீப்தி சர்மா. முதலிடத்தில் 165 டி20 விக்கெட்டுகளுடன் இருந்த தாய்லாந்து வீரர் திபாச்சா புத்தவோங்கை பின்னுக்கு தள்ளினார்.

10 ரன் மட்டுமே.. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா.. பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai