Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
3வது ODI சதமடித்த பிரதிகா ராவல்.. ஜிம்பாப்வேவை தோற்கடித்த இந்தியா!

3வது ODI சதமடித்த பிரதிகா ராவல்.. ஜிம்பாப்வேவை தோற்கடித்த இந்தியா!

ஜிம்பாப்வே மகளிர் அணியை எதிர்த்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 27.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பிரதிகா ராவல் தனது 3வது சதத்தை அடித்து அசத்தியதுடன், ஷபாலி வெர்மா 64 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். இந்தியா டி20 தொடரை வென்றதுடன், ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஜிம்பாப்வே மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. வதோதரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 197 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

 பிரதிகா ராவல்

198 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணி 27.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடக்க வீராங்கனையாக விளையாடிய பிரதிகா ராவல் தன்னுடைய 3வது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். டி20 தொடரில் அசத்திய ஷபாலி வெர்மா ஒருநாள் போட்டியிலும் 64 ரன்கள் அடித்து அசத்தினார்.

பச்சை நிறத்தில் டெஸ்ட் பிட்ச்.. 4 பேர் டக்அவுட்! 113 ரன்னுக்கு சுருண்ட இந்தியா!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai