Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

"ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல்களை தடுத்து வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில், வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration) திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தை, ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை ஆய்வுக் கூட்டம் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இன்று சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

 விஜய், லோகேஷ் தமிழ்ச்செல்வன்

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றபின் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கும் நடமுறையை முற்றிலும் ஒழிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம், ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு முறை அமல். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம். பத்திரப்பதிவு துறையில் இடைத்தரகர்களை அனுமதிக்க மாட்டோம். ஆன்லைன் முறையிலேயே அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ள முடியும். ஆன்லைன் முறையால் 30% மக்கள் பத்திரப்பதிவு அலுவலகம் வருவது குறையும். ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"திருமாவளவனோடு கருத்து வேறுபாடு இல்லை" - ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்!!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai