பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரின் மரியாதையற்ற நடத்தை குறித்து விஜய் சேதுபதிக்கு ஆதரவாக ரசிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் தொடர்வதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கி மிகப்பெரிய ஹிட்டடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். அந்தவகையில் தற்போது தொடங்கி நடைபெற்றுவரும் 10வது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கிவருகிறார்.
விஜய் சேதுபதிஇந்நிலையில் கடைசி பிக்பாஸ் எபிசோடில் கண்டஸ்டண்ட் ஒருவருக்கு தொகுப்பாளராக அறிவுரை வழங்கும்போது, அவர் விஜய் சேதுபதிக்கு மரியாதை கொடுக்காமல் மோசமான உடல்மொழியுடன் பதிலளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. விஜய் சேதுபதி பேசும்போது என்ன சொல்றீங்க, நீங்க பேசவே விடமாட்றீங்க என கண்டஸ்டண்ட் சொல்கிறார், அதற்கு அப்படியெல்லாம் நீங்கள் பேசக்கூடாது என்று விஜய் சேதுபதி எச்சரிக்கிறார். இந்த புரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதே இடத்தில் கமல்ஹாசனோ, சல்மான் கானோ, கிச்சா சுதீப்போ இருந்தால் இப்படி ஒருவர் பேசமுடியுமா?, உங்களுக்கு ஏன் இந்த அவமானம், நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடுங்கள் என ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.
அதே கருத்தை இசையமைப்பாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கையாக வைத்துள்ளார்.
"இவரு அவர சொல்றாரு.." அட்லீ பேச பேச முகம்மாறிய விஜய் சேதுபதி!இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஜேம்ஸ் வசந்தன், "அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களுக்கு,உங்கள் மீது எனக்குத் தனிப்பட்ட மதிப்பும், நேசமும் உண்டு, சமூக அக்கறையுள்ள ஒரு நல்ல கலைஞன் என்பதால்.
Bigg Boss நிகழ்ச்சி உங்களுக்கு தொழில் முறையிலும், மக்களிடம் தொடர்பில் இருக்கும் விதத்திலும் நன்மை பயக்கிற நிகழ்ச்சி என்பது நாங்கள் அனைவரும் உணர்ந்ததுதான்.
ஆனால், உங்கள் தன்மானத்தையும் நன்மதிப்பையும் இழந்து அவைகளை நீங்கள் பெறவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
கொஞ்சம்கூட பண்பும் ஒழுக்கமுமற்ற, உங்களைவிடப் பல ஆண்டுகள் வயதில் குறைந்த ஒரு போட்டியாளன் உங்கள் மாண்பைத் தகர்க்கிற எல்லையைத் தாண்டிய பிறகும் நீங்கள் அவனை சகித்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் தொடரவேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதாக நானும், இந்நிகழ்ச்சி ஆதரவாளர்களும் நினைக்கவில்லை.
நீங்கள் நல்லவராக நடந்துகொள்ள ஏற்ற இடம் பல இருக்கின்றன. இதில் நீங்கள் தவறுகிறீர்கள் என நானும், பலரும் உணர்கிறோம்.
சிந்தித்துச் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்/நம்புகிறோம்" என பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவிற்கு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
CM விஜயை விமர்சித்து பேசினாரா விஜய் சேதுபதி? 'தலைவனுக்கான பண்பில்லை..' வைரலாகும் வீடியோ!
