Dailyhunt
அமெரிக்காவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யத் தடை.. சுவிட்சர்லாந்து அதிரடி!

அமெரிக்காவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யத் தடை.. சுவிட்சர்லாந்து அதிரடி!

சுவிட்சர்லாந்து, அமெரிக்கா-ஈரான் போர்ச் சூழலில் தனது நடுநிலைக் கொள்கையை நிலைநாட்டும் வகையில், அமெரிக்காவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.

மேலும், அமெரிக்க ராணுவ விமானங்கள் சுவிட்சர்லாந்து வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தனது பாரம்பரிய 'நடுநிலை' கொள்கையை நிலைநாட்டும் வகையில் சுவிட்சர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்தவும் சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது.

 சுவிட்சர்லாந்து

தனது நாட்டின் பாரம்பரியமான 'நடுநிலை' கொள்கையை நிலைநாட்டும் வகையில், அமெரிக்காவிற்குப் புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்யச் சுவிட்சர்லாந்து அரசு தற்காலிகத் தடையை விதித்துள்ளது. மேற்காசிய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி 28 முதல் போர் தீவிரமடைந்துள்ளது. சர்வதேச ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற தனது நடுநிலைச் சட்டத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் கொள்கையின்படி, போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்குத் தற்காப்பு அல்லது தாக்குதல் சார்ந்த ஆயுதங்களை வழங்க அனுமதிப்பதில்லை. பிப்ரவரி 28, 2026 முதல் அமெரிக்காவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான எந்தவொரு புதிய உரிமமும் வழங்கப்படவில்லை. ஏற்கெனவே சுவிட்சர்லாந்து தனது வான்வெளியை அமெரிக்க ராணுவ விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. போர் தொடர்பான நடவடிக்கைகளுக்காகச் செல்லும் விமானங்கள் சுவிட்சர்லாந்து வான்வெளியைக் கடக்க முடியாது.

 Switzerland halts weapon exports to US

ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மற்றும் தற்போதைய போருடன் நேரடியாகத் தொடர்பில்லாத ஏற்றுமதி உரிமங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், உயர்மட்ட நிபுணர் குழு இதுகுறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்யும். சுவிட்சர்லாந்து ஆயுத உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்கா ஒரு மிகப்பெரிய சந்தையாகும் (சுமார் 10% ஏற்றுமதி அமெரிக்காவிற்குச் செல்கிறது). கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ₹1,000 கோடி (119 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஆயுதங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai