Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அப்பாவா? அம்மாவா?.. குழந்தையின் புத்திசாலித்தனத்துக்கு யாரின் மரபணு காரணம்?

அப்பாவா? அம்மாவா?.. குழந்தையின் புத்திசாலித்தனத்துக்கு யாரின் மரபணு காரணம்?

லான் மஸ்க் போன்ற பணக்காரர்கள் தங்கள் விந்தணுக்களை தானம் செய்து அறிவார்ந்த குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் அறிவியல் ஆய்வுகளால் கேள்விக்குள்ளாகிறது.

எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், மூளையின் சிந்தனைத் திறனை கட்டுப்படுத்தும் செரிப்ரல் கார்டெக்ஸில் தந்தை மரபணுக்கள் இல்லாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியில் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், குழந்தையின் அறிவுக் கூர்மைக்கு அம்மாவின் மரபணு, குறிப்பாக ஐக்யூ அளவு, முக்கிய காரணியாக விளங்குகிறது.

குழந்தைகளின் புத்திசாலித்தனத்துக்குத் தந்தையின் மரபணுக்கள் எவ்வளவு முக்கியம் என்ற சுவாரசியமான அறிவியல் பார்வையை இப்போது பார்ப்போம். உலகப் பணக்காரரான எலான் மஸ்க் போன்ற பலர், தங்களைப் போன்ற அறிவார்ந்த குழந்தைகள் அதிகம் பிறக்க வேண்டும் என்ற நோக்கில் விந்து தானம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், 'அறிவுள்ள தந்தைக்கு அறிவுள்ள குழந்தை' என்ற கோட்பாடு முற்றிலும் உண்மையல்ல என்று அறிவியல் கூறுகிறது.

 Genetics of intelligence

முன்னதாக 1980களில் அமெரிக்காவில் திறமையான ஆண்களின் விந்தணுக்களைக் கொண்டு இயங்கிய விந்து வங்கி மூலம் 215 குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவர்கள் யாரும் பிற்காலத்தில் பெரும் மேதைகளாக மாறவில்லை; சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தனர். ஆராய்ச்சிகளின்படி, குழந்தைகளின் அறிவுக் கூர்மைக்குத் தந்தையை விட அம்மாவின் மரபணுக்களே முக்கியக் காரணியாக விளங்குகின்றன.

எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், மூளையின் சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்தும் 'செரிப்ரல் (Cerebral) கார்டெக்ஸ்' (Cortex) பகுதியில் தந்தையின் மரபணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. மாறாக, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதியிலேயே அவை இருந்தன. எனவே, புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பதற்கு அம்மாவின் ஐக்யூ (IQ) அளவே மிக முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

குழந்தைகளை மாற்றும் '10+10+10' விதி.. பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வளர்ப்பு முறை!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai