Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது தமாக" - ஜி.கே. வாசன் அறிவிப்பு!

"பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது தமாக" - ஜி.கே. வாசன் அறிவிப்பு!

2019-ம் ஆண்டு முதல் அதிமுக - என்.டி.ஏ கூட்டணியில் பயணித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த 2024-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியபோதும் கூட என்.டி.ஏ.

கூட்டணியிலேயே இருந்தது. இந்தசூழலில் தான், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக தான் போட்டியிட்ட 27 இடங்களில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது. அதேபோல, இத்தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து 5 இடங்களில் பாஜகவின் தாமரை சின்னத்தில் இருந்து போட்டியிட்ட தமாக-வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

 ஜிகே வாசன்

இதையடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் இருந்து தாமக விலகப்போவதாக தகவல்கள் வெளியாகிவந்தன. இந்தசூழலில் தான், தமிழ் மாநில காங்கிரஸின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து தமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

"மோடி அரசுக்குப் பாதை அமைத்துத் தராதீர்கள்.." ராகுல் காந்தி பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்!

இதுகுறித்து அவர் பேசுகையில், "தாமகவை புதுப்பித்து 12 ஆகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் நாங்கள் பல கூட்டணிகளில் பயணித்தும் எங்கள் கட்சியினர் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ செல்லும் கனவு நனவாகாமல் இருக்கிறது. ஒரு கூட்டணியியுடன் பயணிக்கும் போது, இயக்க பணிகள் செய்யும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். தனித்தன்மையுடன் தாமக செயல்பட வேண்டும் என கட்சினர் விரும்புகிறார்கள். தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமாகாவை பலப்படுத்த வேண்டும்.

 மோடி - ஜி.கே. வாசன்

எனினும், அதிமுகவுடனோ அல்லது பாஜகவுடனோ எங்களுக்கு சண்டைகள் கிடையாது. நட்பு சக்தியாகவே அவர்களுடன் பயணித்தோம். நட்பு சக்தியாகவே அவர்களுடன் இருந்து விலகுகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நெருக்கத்தில் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஜிகே வாசன் வெளியேறும் நிலையில், காங்கிரஸ் இல்லாத தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியை நோக்கி ஜிகே வாசன் செல்ல வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"அதிமுக வென்றது பாமக போட்ட பிச்சை.." EPS-ஐ கடுமையாக விமர்சித்த சிவி சண்முகம்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai