Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேக்கரி, பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. வைட்டமின் குறைபாட்டால் மறதிநோய் அபாயம்!

பேக்கரி, பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. வைட்டமின் குறைபாட்டால் மறதிநோய் அபாயம்!

வைட்டமின் குறைபாடுகள் நடுத்தர மற்றும் முதிய வயதினருக்கு மறதிநோய் எனப்படும் 'டிமென்ஷியா' (Dementia) பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள 556 பேரிடம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் மற்றும் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் இணைந்து நடத்திய இந்த ஆய்வு 'தி லான்செட்' மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

 vegetables

ஆய்வில் பங்கேற்றவர்களில் 39 சதவீதம் பேருக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான அதிக அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களிலும், ஆண்களைவிட பெண்களிடமும் இந்தப் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 64 சதவீதம் பேருக்கு வைட்டமின் B2 குறைபாடும், 42 சதவீதம் பேருக்கு வைட்டமின் D குறைபாடும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பால் பொருட்கள், கீரைகள், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளைத் தவிர்த்து, பேக்கரி உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கே இந்த வைட்டமின் குறைபாடுகளும், மறதி நோய் அபாயமும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மறதி நோயால் முகவரி தெரியாமல் 16 ஆண்டுகள் சுற்றி அலைந்த கேரள ராணுவ வீரர்! சோகமான பின்னணி!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai