Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதிய பாதையில் சென்ற சரக்குக்கப்பல்.. கடல் வழி போக்குவரத்தில் பெரும் திருப்பம்?

புதிய பாதையில் சென்ற சரக்குக்கப்பல்.. கடல் வழி போக்குவரத்தில் பெரும் திருப்பம்?

மேற்காசிய கடல் வழியில் தொடரும் போர் பதற்றம் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில், தென் கொரியா 'பான்ஸ்டார் அக்ரோ' சரக்கு கப்பலை ஆர்க்டிக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு சோதனை ரீதியில் அனுப்பியுள்ளது.

பூமியின் வடபகுதி வழியாகச் செல்லும் இந்த புதிய பாதை வெற்றியடைத்தால், உலக கடல் சரக்கு போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவுக்கு தென்கொரியா ஒரு சரக்கு கப்பலை அனுப்பியுள்ளது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. அது சென்ற பாதைதான் உலகளவில் அப்பயணம் கவனம் பெற்றதற்கு காரணம். வழக்கமாக மேற்காசிய பகுதி கடலை ஒட்டியே ஆசியா, ஐரோப்பா கப்பல் போக்குவரத்து நடைபெறும் நிலையில் இம்முறை பூமிப்பந்தின் வடபகுதியில் ஆர்க்டிக் கடல் வழியே பான்ஸ்டார் அக்ரோ என்ற சரக்கு கப்பலை சோதனை ரீதியில் தென்கொரியா அனுப்பியுள்ளது.

மேற்காசிய நாடுகளில் அடிக்கடி ஏற்படும் போர்ப்பதற்றம் உலகளவில் சரக்கு போக்குவரத்தை கடுமையாக பாதித்து பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது.

இந்நிலையில் தென் கொரியா மாற்றுப்பாதையை சரக்குப்போக்குவரத்துக்கு தேர்ந்தெடுத்துள்ளது கவனம் பெறுகிறது. இப்பயணம் வெற்றிபெறும் பட்சத்தில் அது உலக கடல் வழி சரக்குப்போக்குவரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்.. 22 மாலுமிகள் மாயம்.. தேடுதல் பணியில் இந்தியக் கப்பற்படை!!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai