Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"டெங்கு அதிகரிக்க தவெக காரணம்" - மேயர் பிரியா குற்றச்சாட்டு!!

"டெங்கு அதிகரிக்க தவெக காரணம்" - மேயர் பிரியா குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்திருக்கும் அதேசூழலில், டெங்கு பரவலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 332 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், சென்னையில் மட்டும் 70 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச்சூழலில் தான், சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

 மேயர் பிரியா

மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடுகளில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தோம். முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் வெற்றியை கொண்டாடுவதில் இவ்வளவு காலம் சென்று விட்டது. அவர்களின் மெத்தன போக்கே டெங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது" என தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை முழுமையான காலப்பகுதியில், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 25,585 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால், நடப்பாண்டில் தற்போது அக்டோபர் மாதத்திலேயே ஜனவரி 1 முதல் அக்டோபர் 22 வரை டெங்குால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,481 ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீத்தேன் திட்டத்துக்கு முடிவு! காவிரி டெல்டாவில் விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai