மேற்கு வங்கத்தில் கடும் போட்டி
சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில், இதுவரை இல்லாத அளவாக 92.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 4 வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், பாஜக கடும் போட்டி தருகிறது.
கேரளா முதல்வராகும் சசிதரூர்?
கேரளாவில் இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், மூத்த தலைவர் சசி தரூரிடம், 'அடுத்த முதல்வர் நீங்கள்தானா'எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
சசி தரூர்அதற்குப் பதிலளித்த அவர், "நீங்கள் என்னை என்ன சொல்ல வைக்க முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்குத் துல்லியமாகத் தெரியும். நான் அதையெல்லாம் சொல்லப் போவதில்லை. காங்கிரஸ் கட்சியில் ஒரு வழக்கமான நடைமுறை உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியின் தலைவரின் பிரதிநிதி சந்திப்பார். சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அந்த நபர் புரிந்துகொள்வார். மேலிடம் அதைக் கருத்தில்கொண்டு இறுதி முடிவை எடுக்கும். அதன் பிறகு, அவர்கள் எந்த விதிகளுக்கோ அல்லது வரம்புகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் விரும்பியதை தேர்வு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, மாநிலத்தின் சில பகுதிகளில் திட்டமிட்டு மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்குகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அசாமில் பாஜக முன்னிலை
மேற்கு வங்கத்தில் பாஜக முன்னிலை
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் முன்னிலை
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
தி.காங் 112 பாஜக 113 காங்ரஸ் 5 பிற 0
கேரளா முன்னிலை நிலவரம்
இடது ஜனநாயக முன்னணி 59 ஐக்கிய ஜனநாயக முன்னணி 55 என் டி ஏ 2 பிற 2
அசாம் முன்னிலை நிலவரம்
பாஜக 63 இண்டியா 9 ஏஐயுடிஎஃப் 0 மற்றவை 1
புதுச்சேரி முன்னிலை நிலவரம்
பாஜக 22 காங்கிரஸ் 6 பிற 1
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
தி.காங் 118 பாஜக 107 காங்கிரஸ் 5 பிற 0
கேரளா முன்னிலை நிலவரம்
ஐக்கிய ஜனநாயக முன்னணி 74 இடது ஜனநாயக முன்னணி 58 என்டிஏ 3 பிற 2
அசாம் முன்னிலை நிலவரம்
பாஜக 69 இண்டியா 16 ஏஐயுடிஎஃப் 1 பிற 1
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
பாஜக 118 தி.காங் 110 காங்கிரஸ் 5 பிற 0
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
பாஜக 123 தி.காங் 108 காங்கிரஸ் 5 பிற 3
கேரளா முன்னிலை நிலவரம்
ஐக்கிய ஜனநாயக முன்னணி 89 இடது ஜனநாயக முன்னணி 46 என்டிஏ 5 பிற 0
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
பாஜக 132 தி.காங் 108 காங்கிரஸ் 3 பிற 4
அசாம் முன்னிலை நிலவரம்
பாஜக 91 இண்டியா 27 ஏஐயுடிஎஃப் 1 பிற 1
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
பாஜக 145 தி.காங் 108 காங்கிரஸ் 2 பிற 4
தேர்தல் ஆணையம் பதிவிட்டுள்ள முன்னிலை நிலவரம்
மேற்கு வங்கம்
BJP 63, AITC 35, BGPM 1, AJUP 1
கேரளா
INC 57, CPI(M) 30, IUML 20, CPI 11, KEC 5
அசாம்
BJP 73, INC 23, BOPF 9, AGP 9, AIUDF 2
புதுச்சேரி
AINRC 7, INC 3, IND 3, BJP 2, ADMK 1
சுவேந்து அதிகாரி முன்னிலை
suvendhuஆரம்பக்கட்ட சுற்றுகளில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியைவிட முன்னிலை பெற்றுள்ளார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கை தொடரத் தொடர இவை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் அரசியல் பயணத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள இத்தொகுதி, அதிகாரியுடனான நேரடி மோதலால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
பவானிபூரில் வாக்குவாதம்
கொல்கத்தாவின் பவானிபூரில் உள்ள சாகாவத் நினைவுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே, வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக முகவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலை
அசாமின் ஜலுக்பாரி தொகுதியில், பாஜகவின் ஹிமந்தா பிஸ்வா சர்மா தற்போது 5,989 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இதுவரை 1,010 வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோக்கை விட 4,979 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி
Rangasamyபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி. முன்னாள் முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான வைத்திலிங்கத்தை வீழ்த்தினார்.
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
பாஜக 181 தி.காங் 99 காங்கிரஸ் 0 பிற 3
அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை
அசாமில் 100 இடங்களை நெருங்கும் பாஜக. ஜோர்ஹாட் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் கௌரவ் கோகோய் பின்னடைவு.
மம்தா மீண்டும் முன்னிலை
மூன்றாம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, பவானிபூரில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 9,359 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இதுவரை 8,461 வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அவருக்குப் பின்னால் உள்ளார்.
பினராயி விஜயன் பின்னடைவு
ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் தொடர்ந்து பின்தங்கியுள்ளார். அதேபோல், அவரது அமைச்சரவை சகாக்கள் 12 பேரும் ஆரம்பகட்ட நிலவரத்தில் பின் தங்கியுள்ளனர்.
கேரளாவில் சரியும் பாஜக
கேரளாவின் ஆரம்பகட்ட நிலவரங்களில் 10 இடங்களுக்கு மேல் இருந்த பாஜகவின் முன்னிலை தற்போது 2 ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 100 இடங்கள் முன்னிலையை நெருங்கி வரும் நிலையில், இடது முன்னணி 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், பாஜக தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.
புதுச்சேரி உப்பளத்தில் அதிமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி!
புதுச்சேரி உப்பளம் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பழகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், மற்றவை 1 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன. அம்மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட தவெக முன்னிலை பெறவில்லை.
மகாராஷ்டிரா இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
பாராமதி, ராஹுரியில் மஹாயுதி வேட்பாளர்கள் முன்னிலை
பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்
மாநிலத்தில் பாஜக ஒரு வரலாற்று வெற்றியை நோக்கிச் செல்வதை தற்போதைய நிலவரங்கள் தெளிவாகக் காட்டுவதால், கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலை பெற்று, பாதிக்கும் மேற்பட்ட இடங்களைக் கடந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் 82 இடங்களில் பின்தங்கியுள்ளது. பவானிபூரில், 4 கட்ட வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் இருக்கிறார்.
மேற்கு வங்கதில் வெற்றி ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை - தேர்தல் ஆணையம்
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு எவ்விதக் கொண்டாட்ட ஊர்வலங்களையும் நடத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையிலும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கும் பொருட்டும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றுகூடிய காங்கிரஸ் தலைவர்கள்
கேரளாவில், காங்கிரஸ் கூட்டணி பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் வகிக்கும் நிலையில், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, சன்னி ஜோசப் மற்றும் சசி தரூர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடினர்.
பினராயி விஜயன் முன்னிலை!
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அப்துல் ரஷீத்திடம் பல சுற்றுகளாகப் பின்தங்கியிருந்த முதலமைச்சர் பினராயி விஜயன், தற்போது தர்மடம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி 95 இடங்களில் தனது முன்னிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்க, இடது முன்னணி 41 இடங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 89 இடங்களில் மட்டுமே முன்னிலை, பாஜக 180 இடங்களில் முன்னிலை.
மேற்கு வங்கம் முன்னிலை நிலவரம்
பாஜக 187 தி.காங் 98 காங்கிரஸ் 0 பிற 6
மத்தி, தெற்கு, வடக்கு பகுதிகளில் நிலவரம்
கேரளா வடக்குப் பகுதியில் உள்ள 42 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மத்திய கேரளாவில் உள்ள 29 தொகுதிகளில், 23 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ஆறு தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணியும் முன்னிலை வகிக்கின்றன. இந்த இரண்டு பிராந்தியங்களிலும் பாஜக தனது கணக்கைத் தொடங்கவில்லை.
தெற்கு கேரளாவில் உள்ள 48 தொகுதிகளில், 30 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும், 13 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணியும் முன்னிலை வகிக்கின்றன. இங்கு இரண்டு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
அசாம் தேர்தல் ஆணைய நிலவரம்
தேர்தல் ஆணைய நிலவரப்படி அசாமில் தற்போது பாஜக 70 இடங்களில் முன்னிலை, 1 வெற்றி. காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை.
தேர்தல் ஆணைய கேரள நிலவரம்
தேர்தல் ஆணைய நிலவரப்படி கேரளாவில் காங்கிரஸ் 55 இடங்களில் முன்னிலை, 6 வெற்றி. சிபிஐ (எம்) - 26 இடங்களில் முன்னிலை, 2 வெற்றி. ஐயுஎம்எல் - 21 இடங்களில் முன்னிலை, 1 வெற்றி. சிபிஐ 9 இடங்களில் முன்னிலை.
மேற்கு வங்கம் தேர்தல் ஆணைய நிலவரம்
தேர்தல் ஆணைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் 193 இடங்களில் முன்னிலை. திரிணாமுல் காங்கிரஸ் 93 இடங்களில் முன்னிலை
சுரேஷ் கோபி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
திருச்சூர் தொகுதியில் எல்.டி.எப் வேட்பாளர் ஆலங்கோடு லீலாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ராஜன் ஜெ.பள்ளன் 26,803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவின் பத்மஜா வேணுகோபால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இது, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வெற்றிபெற்ற மக்களவை தொகுதியாகும்.
கேரளாவில் வெற்றிக்கு தயாராகும் காங்கிரஸ்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சாண்டி உம்மன் முன்னிலை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலை
காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியின் முக்கியக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சூரிய அஸ்தமனத்திற்குள் நாம் வெற்றி பெறுவோம்; வாக்கு மையங்களை விட்டு வெளியேற வேண்டாம் - மம்தா பானர்ஜி உத்தரவு
ஹாட்ரிக் பட்டியலில் ஹிமந்தா பிஸ்வா சர்மா?
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், அடுத்த முதல்வர் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அந்த வகையில், ஹிமந்தா பிஸ்வா சர்மாவே மீண்டும் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன்மூலம், இந்திய அரசியலில் 'ஹாட்ரிக்' முதல்வர்கள் ஆன பட்டியலில் ஹிமந்தா பிஸ்வா சர்மா இடம்பெறுவார். அந்தப் பட்டியலில் மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), பவன் சாம்லிங் (சிக்கிம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), தருண் கோகோய் (அசாம்) மற்றும் நரேந்திர மோடி (குஜராத்) ஆகியோர் அடங்குவர்.
புதுச்சேரியில் என்டிஏ முன்னிலை
புதுச்சேரியில் 30 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்று, மேலும் 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் அதன் மொத்த இடங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த முன்னிலை நீடித்தால், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கடக்க இது போதுமானதாகும். SPA கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்று, 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் அதன் மொத்த இடங்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் கூட்டாக 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்; இதில் 1 இடத்தில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையும் அடங்கும்.
அசாமில் தற்போது பாஜக 99 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலை.
வரலாறு படைக்கும் காங்கிரஸ்
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இது அம்மாநிலத்தின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும். இடது ஜனநாயக முன்னணி 34 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வெறும் இரண்டு இடங்களில் முன்னிலையிலும் உள்ளன.
கௌரவ் கோகோய் தோல்வி
அசாமில் பாஜக 99 இடங்களில் முன்னிலை; காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலை. அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் தோல்வி.
கேரளாவில் மீண்டெழுந்த காங்கிரஸ்
பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே வலுவான அதிருப்தி அலை. கேரளாவில் மீண்டெழுந்து வந்த காங்கிரஸ் 99 இடங்கள்
புதுச்சேரியிலும் தடம் பதிக்கும் தவெக
புதுச்சேரியில் என் ஆர் காங் கூட்டணி 17, காங்கிரஸ் 6, த வெ க 2 இடங்களில் வெற்றி, 2 இடங்களில் முன்னிலை. தவெக வேட்பாளர்கள் புதுச்சேரியின் மணவெளி தொகுதியில் ராமு, திருபுவனை தொகுதியில் சாய் ஜே சரவணக்குமார் ஆகியோர் வென்றுள்ளனர்.
பவானிபூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
கொல்கத்தாவின் பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில் 13-வது சுற்றுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கவில்லை. மம்தா பானர்ஜி தனது தேர்தல் அட்டை இல்லாமல், கைப்பேசியை கையில் ஏந்தியபடி மையத்திற்குள் நுழைந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து, 99 இடங்களை வென்று பெரும்பான்மை இடங்களை எளிதாகக் கடந்துள்ளது. காங்கிரஸ் 63 இடங்களுடன் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) 22 இடங்களைப் பெற்று கூட்டணியின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
உம்மன் சாண்டி மகன் வெற்றி
மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேரள அரசியலில் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஹரிபாட் தொகுதியில் சிபிஐயின் டிடி ஜிஸ்மோனைவிட 23,377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்னிதலா 68,184 வாக்குகளையும், ஜிஸ்மோனின் 44,807 வாக்குகளையும் பெற்றனர்.
அதேபோல், புதுப்பள்ளியில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், சிபிஐ(எம்) கட்சியின் கே.எம். ராதாகிருஷ்ணனை 52,907 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்தார். இது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) வலுவான உத்வேகத்தைக் குறிக்கிறது.
அரசுக்கு எதிரான அதிருப்தி!
"பொதுமக்களிடையே அரசாங்கத்திற்கு எதிரான தெளிவான அதிருப்தி நிலவியது, நாங்கள் அந்த உணர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டோம். மாநிலத்தில் வாக்காளர்களின் விருப்பங்களை வடிவமைப்பதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர்களின் செல்வாக்கு முக்கியப் பங்கு வகித்தது. கேரள மக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை மிகவும் விரும்புகிறார்கள்" - காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால்
கேரளா: முஸ்லிம் லீக்கின் முதல் பெண் எம்.எல்.ஏ

கோழிக்கோடு மாவட்டம் பேரம்பரா தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியின் பாத்திமா தஹாலியா வெற்றி பெற்று, அக்கட்சியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சிபிஐ(எம்) கட்சியின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில், முன்னாள் அமைச்சரான சிபிஐ(எம்) கட்சியின் டி.பி. ராமகிருஷ்ணனை அவர் தோற்கடித்தார்.
மீண்டும் மம்தா முன்னிலை!
14 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, பவானிபூரில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 48,671 வாக்குகளைப் பெற்று, 44,841 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். எனினும், முந்தைய சுற்றுகளுடன் ஒப்பிடுகையில் வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளது. அவரது, இறுதி முடிவைத் தீர்மானிக்க இன்னும் பல சுற்றுகள் உள்ளன.
அசாமில் பாஜக தொடர்ந்து ஏறுமுகம்
அசாமில் மாலை 5.15 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதுடன், மேலும் 54 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஆக மொத்தம் 82 தொகுதிகளில் அது வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில், அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகளான பிஓபிஎஃப் மற்றும் ஏஜிபி முறையே நான்கு மற்றும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, பிஓபிஎஃப் ஆறு தொகுதிகளிலும், ஏஜிபி ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆக, என்டிஏ இதுவரை 36 தொகுதிகளில் வெற்றி பெற்று, மேலும் 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆக மொத்தம் 101 தொகுதிகளில் அது வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி செல்லும் வேணுகோபால்
கேரளாவில் அமோக வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் அடுத்தகட்டமாக, ஆட்சி அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசிக்க இன்று இரவு டெல்லி செல்லவுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ ஆலோசனைகள் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், கேரள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக்கு (CLP) ஒரு பார்வையாளரை காங்கிரஸ் இன்று இரவு நியமிக்க வாய்ப்புள்ளது.
மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது!
மூன்று முறை ஆட்சியில் இருந்து வரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு (TMC) எதிராக, பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில், மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தினார்.

