Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'என்னுடைய நிதானம், அமைதியின் ரகசியம் இதுதான்..' சாய் பல்லவி பகிர்ந்த விசயம்!

'என்னுடைய நிதானம், அமைதியின் ரகசியம் இதுதான்..' சாய் பல்லவி பகிர்ந்த விசயம்!

நடிகை சாய் பல்லவி தினசரி தியானம் மூலம் மன அமைதியைப் பெறுவதாக கூறியுள்ளார். தியானம் செய்ய தவறினால் மனநிலை சமநிலையற்றதாக உணர்வதாக அவர் பகிர்ந்துள்ளார்.

ராமாயணா படப்பிடிப்பின் போது தியானம் மூலம் கதாபாத்திரத்திற்குத் தயாரான அனுபவத்தை 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் அவர் விளக்கினார்.

தன்னை நிதானமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள உதவுவது தினசரி தியானம் தான் என நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார். இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் தனி முத்திரை பதித்த நடிகை சாய் பல்லவி தினமும் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டவர். தன்னால் தியானம் செய்யாமல் இருக்க முடியாது என்றும் ஒருவேளை தான் தியானம் செய்யத் தவறினால், தன் மனநிலை சற்று சமநிலையற்றதாக இருப்பது போல உணர்வதாக நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துள்ளார்.

 sai pallavi

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி, ராமாயணா படப்பிடிப்புத் தளத்திலும் தியானத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தது, அந்தக் கதாபாத்திரத்திற்குத் தன்னைச் சிறப்பாகத் தயார்படுத்த உதவியதாக அவர் கூறினார்.

'விஜய் சார் அரசியலுக்கு போய்ட்டார்.. நீங்களும்' - தனுஷிடம் கோரிக்கை வைத்த சாய் பல்லவி!

மனம் அழுத்தமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, சிக்கலான நேரங்களில், சீதா தேவி இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொண்டிருப்பார் எனச் சிந்திப்பேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார். சாய் பல்லவியின் இந்த அனுபவத்தை யோகா நிபுணர்களும் ஆமோதிக்கின்றனர்.

இமயமலை ஐயங்கார் யோகா மையத்தின் நிறுவனர் சரத் அரோரா, தினமும் வெறும் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் என்று கூறியுள்ளார். குறுகிய காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து உடனடி நிவாரணம் தருவதுடன், மனத் தெளிவையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 Sai Pallavi

நீண்ட கால அடிப்படையில், அகங்காரத்தைக் குறைத்து உணர்ச்சி ரீதியான சமநிலையையும், சவால்களைக் கையாளும் மன உறுதியையும் தியானம் வழங்குகிறது என்றார். தியானத்தைத் தொடங்க விரும்புவோர், முதலில் வசதியான நிலையில் அமர்ந்து கண்களை மூடி, மூச்சின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும்போது ஆற்றலையும், வெளியே விடும்போது மன இறுக்கம் நீங்குவதையும் உணர வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

'இந்திய சினிமாவை காப்பாற்றுவதே தெலுங்கு ரசிகர்கள் தான்..' விவாதத்தை கிளப்பிய ராணா டகுபதி!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai