Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹவுதி தாக்குதலால் அதிரும் சவுதி.. அராம்கோ ஊழியர்கள் வெளியேற்றம்!!

ஹவுதி தாக்குதலால் அதிரும் சவுதி.. அராம்கோ ஊழியர்கள் வெளியேற்றம்!!

செய்தியாளர் - M.மீரா

ஏமனின் ஹவுதி படைகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் அரசுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco), தனது தலைமையகத்தில் இருந்து பணியாளர்களை அவசரமாக வெளியேறுமாறும், வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் (Work from home) அறிவுறுத்தியுள்ளது.

பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் தஹ்ரான் (Dhahran) நகரில் அராம்கோ நிறுவனத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.

 aramco

அக்டோபர் மாத தொடக்கத்தில், ஹவுதிகள் சவுதி அராம்கோவின் இந்த தலைமையகக் கட்டத்தை ஏவுகணைகள் மூலம் தாக்கினர். இதில் பல தளங்களில் தீப்பற்றி, கட்டிடத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே சில பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது எஞ்சியிருந்த முக்கிய அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்

தஹ்ரானில் இருந்து வெறும் 15 கி.மீ தொலைவிலுள்ள தம்மாம் நகரின் 'கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம்' (King Fahd International Airport) மீது கடந்த புதன்கிழமை (அக்டோபர் 21, 2026) ஹவுதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். இது அராம்கோ ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

 Riyadh

தஹ்ரான் (Dhahran) வளாகத்தில்தான் சவுதி அராம்கோவின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (Operations Centre) அமைந்துள்ளது. இங்கிருந்துதான் சவுதி அரேபியாவின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் எண்ணெய் குழாய்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடல்சார் எண்ணெய் கிணறுகள் கண்காணிக்கப்படுகின்றன. இதன் முக்கியத்துவம் கருதியே ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க இந்த தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான்/அமெரிக்காவின் வரலாற்றுப் பிழை... கொடூர தாக்குதலில் 123 குழந்தைகள் உயிரிழப்பின் பகீர் பின்னணி!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai