விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, திரையரங்கிலும் OTT-யிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
சீனாவில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்க, இது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படமாகும்.
விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான 'மகாராஜா'. விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான 'மகாராஜா', அதன் வித்தியாசமான திரைக்கதை, நான்-லீனியர் திரைக்கதை அமைப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. வசூல் ரீதியிலும் உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் படமாக அமைந்த இப்படம், திரையரங்க வெற்றிக்குப் பிறகு OTT வெளியீட்டிலும் 'மகாராஜா' அதிக கவனம் பெற்றது.
Maharaja poster'மகாராஜா'வின் இந்தி ரீமேக் உரிமையும் ஏற்கனவே வாங்கப்பட்டதாக 2024-ல் செய்திகள் வெளியாகியிருந்தன. அதில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடிக்கலாம் என்ற தகவலும் பரவியது. இப்படத்துக்கு சீனாவில் கிடைத்த வரவேற்புக்கு பிறகு, ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று படத்தின் ரீமேக் உரிமைக்காக அணுகியதாக படத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் சில பேட்டிகளில் தெரிவித்தார்.
தொடர்ந்து ஹாலிவுட்டில் இப்படத்தை ஒரு முதன்மை நடிகரை வைத்து உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.குறிப்பாக Interstellar உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல Matthew McConaughey தான் `மகாராஜா' படத்தின் ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்கிறார் என்று சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது .
Matthew McConaugheyஇந்நிலையில் 'மகாராஜா' திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது எனவும், இதனை ஹாலிவுட்டின் முதன்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் ஒரு படைப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்று, தற்போது ஹாலிவுட் ரீமேக் முயற்சியையும் எட்டியிருப்பது 'மகாராஜா' படத்தின் அடுத்த கட்ட பயணமாக அமைந்துள்ளது.

