Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
`ஜோ' பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி வி பிரகாஷ்! | G V Prakash

`ஜோ' பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி வி பிரகாஷ்! | G V Prakash

கோலிவுட்டில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், 'ஹேப்பிராஜ்' வெற்றிக்குப் பிறகு புதிய படத்தில் நாயகன், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என மூன்று பொறுப்பில் களமிறங்குகிறார்.

'ஜோ' பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் இந்த படத்தில், மாளவிகா மனோஜ் ஜோடியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறது.

கோலிவுட்டில் இசையமைப்பாளாராக, நடிகராக பிஸியாக இயங்கி வருபவர் ஜி வி பிரகாஷ்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான `ஹேப்பிராஜ்' நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 G V Prakash

ரியோ, மாளவிகா மனோஜ் நடித்து வெற்றிபெற்ற `ஜோ' படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். 'ஜோ' படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'கர்ணன்', 'வாழை' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தேனி ஈஸ்வர் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.

"அந்த பயணம் முடிந்து வந்ததும் செய்த முதல் விஷயம்..." - மஞ்சு வாரியர் | Manju Warrier | Ajith

இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து 'கருடன்' மற்றும் 'மாமன்' ஆகிய படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

26 நாட்கள்தான்.. பாகுபலி, புஷ்பா சாதனை முறியடிப்பு.. இந்தியாவில் 'துரந்தர்' படைத்த வரலாறு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai