Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காலிறுதிப் போட்டி| எர்லிங் ஹாலண்டுக்கு எதிராக இங்கிலாந்து களமிறக்கும் Secret Weapon.!

காலிறுதிப் போட்டி| எர்லிங் ஹாலண்டுக்கு எதிராக இங்கிலாந்து களமிறக்கும் Secret Weapon.!

டப்பு உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், அச்சுறுத்தும் ஒரு அணியாக டார்க் ஹார்ஸ் டீமாக மாறியுள்ளது நார்வே அணி.

குரூப் சுற்றில் ஃபிரான்ஸுக்கு அடுத்து 2வது இடத்தில் முடித்த நார்வே அணி, ரவுண்ட் 32-ல் ஐவரி கோஸ்ட்டை 2-1 என வீழ்த்தி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியது.

 erling haaland

ரவுண்ட் 16-ல் ஐந்து முறை சாம்பியன் அணியான பிரேசிலை 2-1 என தோற்கடித்த நார்வே, ஒரு அசாதாரண அணியாக மாறி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இத்தொடரில் நார்வேவின் நட்சத்திர நாயகனாக விளங்கும் எர்லிங் ஹாலண்ட் வெறும் 18 தொடுதலில் 7 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நார்வே அணிக்காக கடைசி 54 ஆட்டங்களில் 62 கோல்கள் அடித்து அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

 Harry Kane

அதுமட்டுமில்லாமல் நடப்பு உலகக்கோப்பையில் 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் ரேஸில் இருக்கும் ஹாலண்ட், 12ஆம் தேதி நடக்கவிருக்கும் காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு பெரிய தலைவலியாக மாறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

2-0 என ஆட்டம் காட்டிய எகிப்து.. கடைசி 15 நிமிடத்தில் கம்பேக் கொடுத்த அர்ஜென்டினா! த்ரில் வெற்றி!

இந்தசூழலில் தான் இங்கிலாந்து கோச் டுச்செல் ஹாலண்டுக்கு எதிரான வீரர் மற்றும் அவரை கட்டுக்குள் வைக்கக்கூடிய வீரரை களமிறக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மெக்சிகோவுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய போட்டியில் 10 வீரர்களுடன் இங்கிலாந்து விளையாடியபோது, 75வது நிமிடத்திற்கு பிறகு களத்திற்கு வந்த டான் பர்ன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 75 நிமிடங்களுக்கு பிறகு தாமதமாகக் களமிறங்கி ஆறு கிளியரன்ஸ்களைப் பதிவுசெய்த பர்ன், 60 ஆண்டுகள் பழமையான ஃபிஃபா உலகக் கோப்பை சாதனையை முறியடித்தார்.

இந்தசூழலில் தான் ஹாலண்டுக்கு எதிராக டான் பர்னை ஆயுதமாக்கும் முயற்சியில் இங்கிலாந்து இறங்கியிருப்பதாக தெரிகிறது. 6'7" உயரமுள்ள டான் பர்ன் நல்ல உயரமுள்ள ஹாலண்டுக்கு எதிரான தடுப்பாட்டத்தை சிறப்பாக செய்யும் ஒரு வீரராக இருப்பார் என பார்க்கப்படுகிறது. தடுப்பாட்டத்தில் இடது மற்றும் செண்டர் இரு நிலைகளிலும் விளையாடக்கூடிய பன்முகத் திறனுள்ள டான் பர்ன், ஏற்கனவே நியூகாசில் அணிக்காக விளையாடும் போது ஹாலண்டுக்கு எதிராக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாலண்ட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. நோயால் அவதிப்படும் நார்வே அணி.. சவாலாகும் காலிறுதி!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai