பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக். இந்தி மட்டுமல்லாது அவரது தாய் மொழியான மராத்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் ரிதேஷ்.
இப்போது அவரே இயக்கி நடித்துள்ள படம் `Raja Shivaji'. மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், வித்யாபாலன் எனப் பலரும் நடித்துள்ளனர். இதனை ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் நடிகையும் ரிதேஷ் தேஷ்முக் மனைவியுமான ஜெனிலியா.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் இப்படம் உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் கண்கலங்கியபடி நன்றி சொன்னார் ரிதேஷ். அதேசமயம் தனது கனவுக்கு தூணாக இருந்த ஜெனிலியாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் ரித்தேஷ் பேசுவதைக் கேட்டு, ஜெனிலியா தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
" 'கருப்பு' படத்தில் பணியாற்றுகிறேன் என ரஹ்மான் சாரிடம் சொன்னேன்!" - சாய் அப்யங்கர் | Sai Abhyankkarமேடையில் ஜெனிலியா குறித்துப் பேசிய ரித்தேஷ் தேஷ்முக், "ஒரே ஒருவர் என் வாழ்க்கையில் இல்லை என்றால், இது எதுவுமே நடந்திருக்காது, அந்த ஒருவர் ஜெனிலியா. கனவு காண்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் நீங்கள் கனவு காணும்போது யாராவது ஒருவர் உங்களுக்கு ஆதரவாகவும், உங்கள் மீது நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். அப்படி எனக்கு துணையாக நின்றவர் ஜெனிலியா.
Genelia, Riteish Deshmukhஓர் இயக்குநருக்கு அப்படியான தயாரிப்பாளர் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் என்ன வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய கனவை நனவாக்கினார். நான் இயக்குநராக படங்களை இயக்கிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்காக பல தியாகங்களைச் செய்தார். அவரின் ஆதரவு இல்லை என்றால், இன்று 'ராஜா சிவாஜி' இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்காது. என் வாழ்க்கையிலும், இந்தத் திரைப்படத்திலும் அவர் ஆற்றிய பங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது" எனக் கூறினார்.

