Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'காசா மக்கள் பலியாவதைத் தடுக்க ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்..' - ஹமாஸ்

'காசா மக்கள் பலியாவதைத் தடுக்க ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்..' - ஹமாஸ்

காசா மக்களின் உயிரிழப்பையும் இடம்பெயர்வையும் தடுக்க ஹமாஸ் தன் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஒப்படைக்கப்படும் ஆயுதங்கள் புதிய பாலஸ்தீன நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என ஹமாஸ் கூறி, இது காசா அமைதிக்கான வரலாற்று முயற்சி என வலியுறுத்தியுள்ளது.

காசாவில் அமைதியை ஏற்படுத்த ஹமாஸ் அமைப்பு தன் வசமுள்ள ஆயுதங்களை முழுமையாக ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 ஹமாஸ் அமைப்பு

பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதையும் இடம்பெயர்வதையும் தடுக்கவே இந்த முடிவை எடுத்ததாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு ஈடாக, இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து வெளியேற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆயுதங்கள் புதிய பாலஸ்தீன நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் தங்களுக்கு முழு திருப்தியளிக்கவில்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

தொடரும் போர் | ஈரானை வீழ்த்தமுடியாத அமெரிக்கா.. விரக்தியில் ஆத்திரமடைந்த ட்ரம்ப்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai