Dailyhunt
கேரளா | 3 இடங்களில் பாஜக வெற்றி.. அதிருப்தி தெரிவித்த பினராயி விஜயன்!

கேரளா | 3 இடங்களில் பாஜக வெற்றி.. அதிருப்தி தெரிவித்த பினராயி விஜயன்!

கேரளா​வில் கடந்த பத்​தாண்​டு​களாக பின​ராயி விஜயன் தலைமை​யில் நடை​பெற்று வந்த இடது​சாரி ஜனநாயக முன்​னணியின் (LDF) ஆட்சியை முடிவுக்​குக் கொண்டு வந்​து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (UDF​) இம்முறை ஆட்​சி​யைக்​ கைப்​பற்​றி​யுள்​ளது.

பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

 Rahul Gandhi

கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவுகள் குறித்து பின​ராயி விஜயன் பேசுகையில், "கேரளத்தில் பாஜக 3 தொகுதிகளில் வென்றுள்ளது மதச்சார்பின்மையை காக்க நினைப்பவர்களுக்கு கவலை தரும் செய்தி. தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணியை வாழ்த்துகிறேன். தாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட இருக்கிறோம். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கப்போகிறோம்'' என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

தேர்தலில் LDF தோல்வியடைந்ததற்குக் காரணம், முக்கியமாக இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகளால் உருவாக்கப்பட்ட அரசியல் சூழலே என்று பினராயி தெரிவித்தார். UDF, பாஜக மற்றும் ஊடகங்களின் ஒரு பிரிவு ஆகியவை இந்தச் சக்திகளில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''இது நடந்தால் நாளை VIJAY முதல்வராக பதவியேற்பார்.." உடைத்த ஷ்யாம் .
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai