Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குண்டுகளைவிட கொடிய ஆயுதம்.. டோட்டலாக முடங்கப்போகும் ஈரான்.. ட்ரம்பின் புதிய திட்டம்!

குண்டுகளைவிட கொடிய ஆயுதம்.. டோட்டலாக முடங்கப்போகும் ஈரான்.. ட்ரம்பின் புதிய திட்டம்!

ரான் மீதான தாக்குதல்கள் ஏறக்குறைய இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் வேறொரு ஆயுதத்தைச் சார்ந்திருக்கத் திட்டமிட்டுள்ளது.

இதனால் ஈரானின் மோசமடைந்து வரும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்தே இப்போது உண்மையான அழுத்தம் வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தியாளர் ; M.

ஈரானை மீண்டும் நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா தற்போது இராணுவத் தாக்குதலைவிட பொருளாதார அழுத்தத்தையே முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்சியோஸ் வெளியிட்ட செய்தியின்படி, பொருளாதாரத் தடைகள், வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் கடற்படை கண்காணிப்புகள் ஆகியவை, குண்டுவீச்சைவிட ஈரானுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

 iran war

ட்ரம்ப், 13 நாட்கள் தொடர்ந்து நடத்திய தாக்குதல்களை நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஈரான் ஒப்பந்தம் குறித்து ஆர்வம் காட்டியதாக அவர் கூறியிருந்தாலும், நேரடிப் பேச்சுவார்த்தை கோரியதாக ஈரான் மறுத்துள்ளது.

இதையும் படிக்க: டெல்லி CJP போராட்டம் | வீடு திரும்பாத அபிஜித் தீப்கே.. கவலையில் பெற்றோர்!

அமெரிக்காவை சீண்டும் ஈரான்.. மெலனியா டிரம்ப் குறித்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது ஈரானின் மிகப்பெரிய பிரச்னை போர் அல்ல, பொருளாதார நெருக்கடிதான். உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தாலும், ஈரான் தற்போது பெட்ரோல் பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது இராணுவத்திற்கும் ஆதரவுக் குழுக்களுக்கும் தேவையான நிதியை வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 iran war

இதன் ஒரு பகுதியாக, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, வங்கித் துறை, கப்பல் போக்குவரத்து மற்றும் ஆயுதக் கொள்முதல் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் மீது புதிய தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை.. ஈரானில் ஆட்சி அமைப்புக்குள் வெடித்த மோதல்!

இதற்கிடையில், ஓமன், கத்தார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மூலம் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஆலோசனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 iran war

ஆனால், அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாது என்ற உத்தரவாதம், பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி வேண்டும் என்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்து வருகிறது. மறுபுறம், அணுசக்தி திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ட்ரம்ப் உறுதியாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. ட்ரம்பின் இந்தப் பொருளாதார அழுத்தம் என்ற புதிய அணுகுமுறை பலனளிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai