Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மாடர்ன் உடை வீடியோ விவகாரம்.. அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

மாடர்ன் உடை வீடியோ விவகாரம்.. அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!

மேலைநாட்டு உடை அணிந்த பெண் ஒருவர் காரிலிருந்து இறங்கும் காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பெண் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எனக் குறிப்பிட்டு, அவரது உடை மற்றும் தோற்றத்தைக் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். தனது பெயரில் தவறாகப் பரப்பப்பட்ட வீடியோ, பெண் வெறுப்புப் போக்கை வெளிப்படுத்துவதாக அமைச்சர் கீர்த்தனா விமர்சித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தானாகவே இருந்தாலும்கூட, அதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பி உள்ளார். பெண்களின் உடை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போக்கை இனி அனுமதிக்க முடியாது என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இந்தச் சர்ச்சைக்குள் தற்செயலாக இழுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தனது ஆதரவையும் பாராட்டுக்களையும் தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai