Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மருதுபாண்டியர்கள் குருபூஜை நிகழ்வு.. முன்னேற்பாடுகள் தீவிரம்

மருதுபாண்டியர்கள் குருபூஜை நிகழ்வு.. முன்னேற்பாடுகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தின குருபூஜையை முன்னிட்டு, அரசு நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போர் பிரகடனம் வெளியிட்ட வீரர்களான மருதுபாண்டியர்கள், 1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 மருதுபாண்டியர்களின் நினைவு தினம் முன்னேற்பாடுகள் தீவிரம்

இதனை நினைவுகூறும் வகையில், மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினம் நாளை (அக்டோபர் 24) அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, திருப்புத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மண்டபத்திலும், பேருந்து நிலையம் எதிரே அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள நினைவுத்தூண் பகுதியிலும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழாவை முன்னிட்டு நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் பகுதிகளுக்கு வண்ணம் பூசுதல், சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்துதல், சுகாதார வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை நடைபெற உள்ள விழாவில் அமைச்சர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில், 1,400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் (163) 1 (பழைய 144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai