Dailyhunt
மீண்டும் போர் | அமெரிக்கப் படைகளுக்கு 'மாரடைப்பு ஏற்படுத்தும் ஆயுதம்..' மிரட்டும் ஈரான்!

மீண்டும் போர் | அமெரிக்கப் படைகளுக்கு 'மாரடைப்பு ஏற்படுத்தும் ஆயுதம்..' மிரட்டும் ஈரான்!

திபர் ரம்ப் அமைதித் திட்டத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகளுக்கு அருகே 'மாரடைப்பு ஏற்படுத்தும் ஆயுதம்' இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்துவருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 Hormuz

இந்தச் சூழலில் ஈரான் இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்காவிற்கு 3 நிபந்தனைகளை முன்மொழிந்தது. இந்த முன்மொழிவு, முதலில் பேச்சுவார்த்தை, பிறகு அணு ஆயுதப் பேச்சு என்ற அணுகுமுறையை மையமாகக் கொண்டிருந்தது.

ஈரான் அமெரிக்க போர் | "ட்ரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்.?" - ஜே.டி. வான்ஸ் கவலை!

ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத அதிபர் ட்ரம்ப், 'ஈரானியர்கள் தங்களை சரிபடுத்திக் கொள்ளவில்லை. இனி நல்லவனாக இருக்க முடியாது எனவும் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் அமெரிக்கக் கடற்படை முற்றுகை தொடரும்' எனவும் தெரிவித்திருந்தார்.

 iran war

இதனைத் தொடர்ந்து ஈரானின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான போரில் ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளார். அந்த ஆயுதத்தைக் கண்டு எதிரிப் படைகள் மிகுந்த அச்சம் கொள்ளக்கூடும் என்றும், அது அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் 'Chicken Game'.. அமெரிக்கா - ஈரான் நேரடி மோதல்!

மேலும், அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக ஈரானியப் படைகள் குறைந்தது ஏழு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவால் அந்தக் கப்பலிலிருந்து விமானங்களை ஏவவோ அல்லது வான்வழி நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​முடியவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

 Abrahan Lincoln

ஹார்முஸ் நீரிணையை நாங்கள் மூடியுள்ளோம். அமெரிக்கா இன்னும் நெருங்கி வந்தால், நாங்கள் எவ்விதத் தாமதமுமின்றி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் ஈரான் கூறியுள்ளது.

சில ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சட்டவிரோதமாகக் கைப்பற்றியுள்ளன. அந்த கப்பல்களில் இருந்த பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் அவர்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்துள்ளனர்.

 ran's Navy Commander Rear Admiral Shahram Irani

சோமாலியக் கடற்கொள்ளையர்களைவிட அமெரிக்கர்கள் மோசமானவர்கள். ஏனெனில், சோமாலியக் கடற்கொள்ளையர்கள் வறுமையின் காரணமாகவே அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இவர்கள் அட்டூழியம் செய்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள் என்று ஈரான் கூறியுள்ளது.

ஈரான் மீதான போர் 2 வாரம் நிறுத்தம்.. தாக்கம் என்ன? பொருளாதார வல்லுநர் கருத்து!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai