Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மேகம் போல் விரட்டிய வெள்ளம்! 'இப்படித் தான்' தப்பித்தோம்! சாவின் விளிம்பை தொட்டு வந்த தம்பதி!

மேகம் போல் விரட்டிய வெள்ளம்! 'இப்படித் தான்' தப்பித்தோம்! சாவின் விளிம்பை தொட்டு வந்த தம்பதி!

நேபாள மலைப்பாதையில் சுற்றுலா சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட தம்பதி, திடீர் வெள்ளத்தில் சிக்கிய திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

மேகங்களைப் போல வேகமாக இறங்கிய வெள்ளத்தை கண்டு, ஓட்டுநர் உடனடி முடிவெடுத்து வாகனத்தைத் திருப்பி அனைவரையும் ஹோட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். உயிர் தப்பியதை இறைவனின் அருளாகக் கருதும் தம்பதி, ஓட்டுநருக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

60 வயதைக் கடந்த இந்தத் தம்பதி, சுமார் 30 சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவுடன் நேபாளத்துக்குச் சென்றிருந்தனர். மலைப்பாதையில் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்கள் சிக்கினர். திகில் அனுபவத்துக்கு பிறகு குழுவில் இருந்த அனைவரும் இறுதியில் எப்படி பாதுகாப்பாக வீடு திரும்பினார் என்பதை தம்பதி கூறினர்.

 Nepal flood

நேபாள மலைப்பாதையில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி, பெருவெள்ளம் வருவதாக எச்சரித்துள்ளார். அப்போது குழுவில் இருந்த சிலர் வாகனத்தை விட்டு இறங்கி, மலையில் இருந்து மேகங்களைப் போல் வேகமாக கீழ்நோக்கி வருவதைப் பார்த்துள்ளனர். முதலில் அது வியப்பை ஏற்படுத்தியதாக பொத்தார் தெரிவித்தார்.

ஆனால் நிலைமையின் ஆபத்தை உடனடியாக உணர்ந்த ஓட்டுநர், அங்கு ஒரு கணம் நிற்பது கூட பாதுகாப்பானதல்ல என எச்சரித்துள்ளார். பின்னர் வாகனத்தை வேகமாகத் திருப்பி, அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இடிபாடுகளுக்குள் கேட்ட சத்தம்! தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! நேபாள பேரழிவில் 'திடுக்!'

சிறிது நேரத்தில் அந்த மலைப்பாதையில் தொடர்ந்து செல்ல முடியாது என்ற தகவல் ஓட்டுநருக்குக் கிடைத்தது. நிலைமை எப்போது சீராகும் என்பது தெரியாததால், அவர் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கே அழைத்துச் சென்றார். ஓட்டுநர் சரியான நேரத்தில் வாகனத்தைத் திருப்பியிருக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொத்தார் தெரிவித்தார்.

இந்த அனுபவத்தை தனது வாழ்க்கைக்கு கிடைத்த மறுவாய்ப்பாகக் கருதுவதாகவும், இறைவனின் அருளால்தான் உயிருடன் வீடு திரும்பியதாக உணர்வதாகவும் அவர் கூறினார்.

 Nepal flood

பின்னர் தம்பதி ஹோட்டலில் இருந்து காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மேற்கு வங்கத்துக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரேபா ரே பொத்தார், கடவுளின் அருளால் பாதுகாப்பாக வீடு திரும்பியதாகக் கூறினார்.

தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் துரிதமான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த அனுகுல் பொத்தார், தங்களை மேற்கு வங்கத்துக்குத் திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்த முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார்.

அனுகுல் தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் பசிர்ஹாட்டைச் சென்றடைந்தனர். இவர்களின் நேபாளப் பயணம், சுற்றுலாவாகத் தொடங்கி பெரும் இயற்கைப் பேரழிவில் இருந்து தப்பிய மறக்க முடியாத அனுபவமாக முடிந்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

நேபாள பேரழிவு கொடுத்த Warning.. இமயமலை சுற்றியுள்ள பிரமாண்ட திட்டங்களால் அச்சம்! பயத்தில் மக்கள்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai