Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மேகதாது அணை | "தமிழ்நாடு கட்சிகள் அரசியல் செய்வார்கள்" - கர்நாடக முதல்வர் பரபரப்பு புகார்!

மேகதாது அணை | "தமிழ்நாடு கட்சிகள் அரசியல் செய்வார்கள்" - கர்நாடக முதல்வர் பரபரப்பு புகார்!

மீபத்தில் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற டி.கே.சிவக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் துணை முதல்வராக இருந்த போது, தமிழகத்திற்கு அணை திட்டத்தை எதிர்க்க எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும், மேகேதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது முதல்வரான பின் இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேதாது திட்டத்தின் தற்போதைய நிலை குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

 மேகதாது அணை

"மேகேது திட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் புதியதாக எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கனவே தனது முடிவை வழங்கிவிட்டது. சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே நாங்கள் செயல்படுகிறோம். எங்களுடைய விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் பெற்றுள்ளன. அவர்கள் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே, இந்த விஷயம் இப்போது முழுமையாக மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" என்றார்.

அரியணையில் டி.கே.எஸ்... ஆதிக்கம் செலுத்தும் சித்தராமையா.. கர்நாடகாவில் மாறாத அரசியல் களம்!

மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது எந்தக் கட்சி அங்கு இருந்தாலும் சரி, அவர்கள் இந்த விவகாரத்தை வைத்துத் தங்களின் அரசியலைத் தொடர்ந்து செய்யவே செய்வார்கள்" என பேசினார்.

இதன்மூலம், மேகதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகிவுள்ளது என்பது தெரிகிறது. தமிழக முதல்வர் விஜய், முதல்வராக பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றப்போது, மேகதாட்டு அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"முதல்வர் கோட் போடுவது பிரச்னை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்னை" - உதயநிதி
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai