Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரே கொசு. 3 கொடிய காய்ச்சல்கள்! மக்களே மழைக்காலத்தில் உஷார்!

ஒரே கொசு. 3 கொடிய காய்ச்சல்கள்! மக்களே மழைக்காலத்தில் உஷார்!

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு, சிக்குன்குனியா, ஸிகா என கொசுக்களால் பரவும் காய்ச்சல்களின் அபாயமும் அதிகரிக்கிறது.

ஆரம்பத்தில் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் மக்களைக் குழப்பும் இந்தக் காய்ச்சல்கள், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது. எனவே இந்தக் காய்ச்சல்களின் அறிகுறிகள், பாதிப்புகள் குறித்து விரிவாகக் காணலாம்..

 mosquito

டெங்கு, சிக்குன்குனியா, ஸிகா ஆகிய மூன்று நோய் பரவல்களுக்கும் காரணம் ஏடிஎஸ் என்ற ஒரே வகைக் கொசுக்கள்தான். இந்த மூன்றுவகை காய்ச்சல்களிலும் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி என ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால், எந்த நோய் என்பதை துள்ளியமாக கண்டறிய முடியாது. டெங்கு காய்ச்சலின்போது கடுமையான உடல்வலி, கண்களுக்குப் பின்புறம் வலி, ரத்தத் தட்டணுக்கள் மளமளவென குறைவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சிக்குன்குனியாவில் கை, கால் மூட்டுகளில் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்படலாம். ஜிகா தொற்றால் லேசான காய்ச்சல், கண்கள் சிவத்தல், தோலில் அரிப்பு ஏற்படலாம். குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு ஸிகா தொற்று ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அறிகுறிகளை மட்டும் வைத்து நோயைக் கண்டறிய முடியாது என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகிறது.

காய்ச்சலுடன் வாந்தி, கடுமையான வயிற்றுவலி அல்லது ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி எக்காரணம் கொண்டும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தாமாகவே யாரும் மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளவே கூடாது. குறிப்பாக, நோய்க்கு காரணமாக உள்ள கொசு உற்பத்தியைத் தடுக்க, வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 water tank

தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும், பூந்தொட்டித் தட்டுகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும் வேண்டும். இதன்மூலம், ஏடிஎஸ் கொசுவால் ஏற்படும் நோய்ப்பரவலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

Insta ரௌடிகளுக்கு செக்: இனி பதிவிட்டால் அவ்வளவுதான்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai