Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சவுரவ் கங்குலி பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | Sourav Ganguly | Rajkummar Rao

சவுரவ் கங்குலி பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | Sourav Ganguly | Rajkummar Rao

ந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தைப் படமாக பதிவுசெய்து அவரது பயோபிக் 'தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' என்ற பெயரில் தயாராகிறது.

இன்று கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

 Dada

இப்படத்தில் ராஜ்குமார் ராவ் சவுரவ் கங்குலி வேடத்தில் நடிக்க, படத்தை விரமாதித்யா மோத்வானே இயக்குகிறார். இன்று வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்தக் கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சேர்த்து இப்படம், 2027 மே 14-ஆம் தேதி வெளியாகிறது எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"என் கருமுட்டைகளை உறையவைத்திருக்கிறேன்!" - க்ரித்தி சனோன் | Kriti Sanon
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai