Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர்..  யார் இந்த வி.எஸ்.பாபு?

ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர்.. யார் இந்த வி.எஸ்.பாபு?

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவின் வடசென்னை மாவட்டச் செயலராக இருந்த இவர், 2006ஆம் ஆண்டு தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவானபோது, ஸ்டாலின் வெற்றி பெற உறுதுணையாக களப்பணியாற்றினார்.

 VS Babu

இருப்பினும், ஸ்டாலின் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றதால், வி.எஸ்.பாபு மீது அதிருப்தி ஏற்பட்டது. அதேசமயத்தில், சேகர்பாபுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால், திமுகவிலிருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தச் சூழலில், இந்தாண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தவெகவில் இணைந்த வி.எஸ்.பாபு, தனது பழைய கோட்டையில் ஸ்டாலினை வீழ்த்தியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai