Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிவகார்த்திகேயன் ஜோடியான பாக்யஸ்ரீ | Seyon | Bhagyashri Borse

சிவகார்த்திகேயன் ஜோடியான பாக்யஸ்ரீ | Seyon | Bhagyashri Borse

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் `சேயோன்' படம் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகவுள்ளது.

`தாய் கிழவி' படம் மூலம் பெரிய வரவேற்பை பெற்ற சிவக்குமாரின் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி வெளியானது.

 Sivakarthikeyan

இப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்சே இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Yaariyan 2 இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கில் Mr. Bachchan, Kingdom போன்ற படங்களில் நடித்தார். துல்கர் சல்மான் நடித்த `காந்தா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் சேயோன் படத்திலிருந்து அவரது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

U/A சான்றிதழ், விரைவில் ட்ரெய்லர்... கருப்பு அப்டேட்ஸ்! | Karuppu | Suriya | R J Balaji

ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்குவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் நேரமாக இருந்ததால் அதற்கான அனுமதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி இருக்கிறது. அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். படத்தை இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

"உங்களுடைய சித்தாந்தங்களும், வெற்றுப் பேச்சுகளும்.." விஜய்க்கு பாடகர் ஸ்ரீநிவாஸ் வாழ்த்து!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai