தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்து வருகிறார். இவரது மகன் ஐ.பி செந்தில்குமார் பழனி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
திண்டுக்கலுக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். ஐ.பெரியசாமி வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தபோது, நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அமைச்சர் ஐ பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயிலுக்கு பூட்டு!மேலும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்க துறையினர் சோதனை என கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமி உறவினர்களுக்கு சொந்தமான வீடு, மில் உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

