Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்நாடு | 2021 தேர்தல் கணிப்புகள் பலித்தனவா? ஓர் அலசல்!

தமிழ்நாடு | 2021 தேர்தல் கணிப்புகள் பலித்தனவா? ஓர் அலசல்!

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான ஊடகங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றே கணித்தன.

குறிப்பாக ரிபப்ளிக் டிவி 160 முதல் 170 இடங்களையும், ஏபிபி-சி வோட்டர் 160 முதல் 172 இடங்களையும், இந்தியா டுடே அதிகபட்சமாக 175 முதல் 195 இடங்களையும் கணித்திருந்தன.

தலைமைச் செயலகம்

அதேபோல் நியூஸ் 24 மற்றும் இந்தியா அஹெட் (India Ahead) ஆகிய நிறுவனங்களும் 160க்கு மேற்பட்ட இடங்களையே கணித்திருந்தன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தியா டுடே 38 முதல் 54 இடங்களையும், டெமாக்ரசி டைம்ஸ் (Democracy Times) 44 முதல் 52 இடங்களையும் மிகக்குறைவாகக் கணித்திருந்தன. இருப்பினும் டிவி 9 மற்றும் சைனிங் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிமுக கூட்டணி 80 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன.

ஆனால் உண்மையான தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 159 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. பெரும்பாலான கணிப்புகளை விட அதிமுக கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டு 75 இடங்களைக் கைப்பற்றியது. மற்ற கட்சிகள் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.

ஆட்சியைப் பிடிக்கும் TVK? பேச்சுவார்த்தையில் அதிமுக? கருத்துக்கணிப்பால் மாறும் அரசியல் களம்?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai