Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. CJP போராட்டம் கடந்து வந்த பாதை!!

தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. CJP போராட்டம் கடந்து வந்த பாதை!!

ளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு மே-3ம் தேதி நடந்தது.

இத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பமாதாக நாடு முழுவதும் எழுந்த புகாரையடுத்து மே -12 ம் தேதி ஏற்கனவே நடைபெற்றிருந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகைமை ரத்து செய்தது.

தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் சொன்ன கருத்துக்களை பகடி செய்யும் விதமாக அமெரிக்காவில் படித்து வந்த அபிஜித் திப்கே என்பவர் ஆன்லைனில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனப்படும் பகடி இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

இந்தசூழலில் தான், ஜூன் 6-ம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் தங்களது முதல் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதில், அக்கட்சியின் நிறுவனரான அபிஜித் திப்கேவும் பங்கேற்று இருந்தார்.

 அபிஜித் தீப்கே

தொடர்ந்து, ஜூன் 12-ம் தேதி முதல் பல்வேறு நகரங்களிலும் இக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், இவர்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை.

இந்தசூழலில் தான், ஜூன் 20-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியது கரப்பான் பூச்சி கட்சி. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதோடு நீட் தேர்வு முறைகேட்டால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இக்கட்சியினரால் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஜூன் 29-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி வந்த நிலையில், ஜூலை 18-ம் தேதி அவரின் உண்ணாவிரதத்தின் 21-வது நாளன்று வலுக்கட்டாயமாக போராட்டக் களத்தில் இருந்து அகற்றி அவரை மருத்துவமனையில் சேர்த்தது காவல்துறை எனினும் சிகிச்சை பெற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை.

இந்தசூழலில் தான், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த படி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேரணியில் ஈடுபட முயன்றனர்.

அப்போது, பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்கும் நோக்கில் காவல்துறை கடுமையான தாக்குதல்களை நடத்தியது. காவல்துறையினர் மாணவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், இந்தியா முழுவதும் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் தொடங்கின. இதற்கிடையில், ஜந்தர் மந்தர் பகுதியில் இணையம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

 ராகுல்காந்தி

ஜூன் 21-ம் தேதி ராகுல்காந்தி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அவரை வலுக்கட்டாயமக காவல்துறை கைது செய்திருந்தது.

26 நாளாக நடைபெற்று வந்த உண்ணாவிரத்தை ஜூலை 23-ம் தேதி சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ஜூலை 23-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வினாத்தாள் கசிவை தடுக்க கடும் விதி களுடன் கூடிய புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தேசிய தேர்வு முகமை (NTA) தன் 47 அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்த நடவடிக்கை 2026, ஜூலை 24, வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 25-ம் தேதி தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் எதிரொலி.. ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்.. இவர் பாஜகவுக்கு ஏன் முக்கியம்? பின்னணி என்ன?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai