Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக முதல் மாநாடு: தேதியில் மாற்றம்...? விஜய் அறிவித்த பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை.. காரணம் என்ன?

தவெக முதல் மாநாடு: தேதியில் மாற்றம்...? விஜய் அறிவித்த பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை.. காரணம் என்ன?

செய்தியாளர் சந்தானகுமார்

மிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் 23 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த, கட்சியின் சார்பாக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

அனுமதி கிடைத்திருந்தாலும் கூட, மாநாட்டு ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்கு குறைந்த காலமே இருப்பதன் காரணமாக, வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்திற்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாக தவெக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 'தடைகளை தகர்த்தெறிந்து வலம் வருவோம்' - தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான இறுதி செய்யப்பட்ட தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தபின், காவல்துறையிடம் அனுமதிக்கான கடிதம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, விக்கிரவாண்டியில் செப்23 ஆம் தேதி மாநாடு நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான பின்புதான், தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இந்த முறை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தபின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தேதி மாற்றுவது தொடர்பான புதிய கடிதத்தையும் காவல்துறையினரிடம் வழங்க தவெகவினர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai