Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
`தாய் கிழவி' 100ஆவது நாள் விழா.. இயக்குநருக்கு கார் பரிசு! | Thaai Kizhavi | Sivakarthikeyan

`தாய் கிழவி' 100ஆவது நாள் விழா.. இயக்குநருக்கு கார் பரிசு! | Thaai Kizhavi | Sivakarthikeyan

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், ரெபேக்கா எனப் பலரும் நடித்த படம் `தாய் கிழவி'.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. திரைத்துறையிலும் இயக்குநர் ஷங்கர், அட்லீ, நடிகை ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் இப்படத்தைப் புகழ்ந்து பதிவிட்டனர்.

வசூல்ரீதியிலும் இப்படம் சாதனையைச் செய்தது. படம் வெளியான முதல் நாளில் இந்திய வசூல் ரூ.2.65 கோடி எனச் சொல்லப்பட்டது. படம் வெளியாகி 75 நாட்கள் கடந்தபோது, படத்தின் வசூல் ரூ.90 கோடி என அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இப்போது படம் வெளியாகி 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில் `தாய் கிழவி 100ஆவது நாள் விழா' இரு தினங்களுக்கு முன் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.

"என் கருமுட்டைகளை உறையவைத்திருக்கிறேன்!" - க்ரித்தி சனோன் | Kriti Sanon

இந்நிகழ்வில் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் மற்றும் தாய் கிழவி திரைப்படத்தை வெளியிட்ட திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம், பெரிய அளவில் வசூல் செய்து பெரிய லாபத்தை அடைந்துள்ளது.

 Sivakumar Murugesan

இதில் சிறப்பு நிகழ்வாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் `சேயோன்' படத்தை இயக்கி வருகிறார் சிவக்குமார் முருகேசன்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai