மகளுக்காக ஆபத்தான மிஷனில் இறங்கும் தந்தையின் கதையே `லீடர்'சக்திவேல் (லெஜெண்ட் சரவணன்) தூத்துக்குடியில் தன் மகளுடன் வசிக்கிறார்.
மெக்கானிக் ஷெட்டில் வேலை, மகள் ஐரினை (இயல்) பள்ளியில் விடுவது, திருப்பி அழைத்து வருவது என ஒரு சராசரி அமைதி வாழ்க்கையை வாழ்கிறார். தூத்துக்குடியில் பெரிய சம்பவத்தை திட்டமிடும் டெவில் (சந்தோஷ் பிரதாப்) அந்த ஊரில் துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சால்ட் (பாகுபலி பிரபாகர்) உதவியுடன் பல கன்டெய்னர்களை போர்ட்டுக்குள் இறக்குகிறார். கன்டெய்னரில் ஏதோ மர்மம் இருக்கிறது என சந்தேகிக்கும் காவலதிகாரி இந்திரா (ஆண்ட்ரியா) அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த மூன்று சம்பவங்களும் ஒரே புள்ளியில் இணையும் போது பல மர்மங்கள் வெளியாகிறது. அவை என்ன? துறைமுகத்தில் டெவில் போடும் திட்டம் என்ன? சக்திவேல் உண்மையில் யார்? இதை எல்லாம் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.
Leaderபோரின் கோரமான உளவியலை பேசும் 'நீளிரா'.. தவறவிடக் கூடாத சினிமா! | Neelira Review கமர்ஷியல் களத்தில் விறுவிறுப்பாக ஒரு மாஸ் படம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். அதில் ஏறக்குறைய வெற்றியும் அடைந்துள்ளார்.
லீட் ரோலில் லெஜெண்ட் சரவணன் கடந்த படத்தை விட சற்று முன்னேறி இருக்கிறார். லெஜெண்டில் மீம் மெட்டீரியலாக பார்க்கப்பட்டவர், இம்முறை தோற்றத்தை கச்சிதமாக பிடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். ஆனால் இன்னும் க்யூ கொடுத்ததும் பேசுவது போல் வசனம் பேசுவது, சில உணர்ச்சிகளை கடத்த தடுமாறுவது என இன்னும் பயிற்சி வேண்டும் அண்ணாச்சி. காதலனை நினைத்து வருந்துவது ஒரு பக்கம், கண்டெய்னரை குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாவது என ஆண்ட்ரியா கொடுக்கப்பட்ட வேலையை முடித்திருக்கிறார். மேலதிகாரியாக ஷ்யாம் சரவணனை பற்றிய மர்மத்தை ஆராய பரபரப்பாகிறார். பாயல் ராஜ்புத் ஃபிளாஷ்பேக் ஹீரோயினுக்கான வேலையை செய்கிறார். மகளாக வரும் இயல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கொடூர வில்லனாக சந்தோஷ் பிரதாப் முடிந்த வரை வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.


