Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"திமுகவும் பாஜகவும் வேறல்ல; உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது" - நெல்லையில் விஜய் ஆவேசம்!

"திமுகவும் பாஜகவும் வேறல்ல; உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது" - நெல்லையில் விஜய் ஆவேசம்!

மிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே, தவெக பரப்புரைக்கு காவல்துறை அனுமதி கொடுக்க மறுக்கிறது என அக்கட்சியின் தொண்டர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதற்குப் பிறகு, விஜய் தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபடுவார் எனக் கூறிவந்தார்.

 விஜய்

ஆனாலும், தற்போது வரை திருச்சி மற்றும் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் மட்டுமே பரப்புரை மேற்கொண்டிருந்தார். அதேபோல, தி.நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டும் அதிகப்படியான நிபந்தனைகள் காரணமாக தவெக தரப்பில் இருந்து அப்பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று சைதாப்பேட்டையில் நடைபெறவிருந்த விஜயின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.

"உருட்டல், மிரட்டலை பாஜக கையாள்கிறது; தவெகவால் மக்களை ஏமாற்ற முடியாது" - திருமாவளவன்!

இந்த சூழலில் தான், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 8) விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். இப்பரப்புரைக்கு, காவல்துறை தரப்பில் 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த தவெக அவர், அங்கிருந்து பரப்புரை நடைபெற்ற திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகருக்கு சாலை வழியாக சென்றார். அப்போது, சாலையில் இருபுறமும் திரண்டிருந்து தவெக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

 திருநெல்வேலி பரப்புரை

தொடர்ந்து பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், "திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இல்லையெனில், எதாவது முட்டுக்கட்டை போட்டு நம்மைத் தடுத்திருப்பார். திமுக கூட்டணி பாஜக கூட்டணி இரண்டும் வெளியில் வேறு வேறாக இருந்தாலும், உள்ளுக்குள் இரண்டு பேருமே ஒன்றுதான். அவர்களுக்கான ஒரே நோக்கம், விஜய் மக்களுக்காக வந்துவிடக்கூடாது என்பது தான். கூட்டணியில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் ஓட்டுபோடுவார்களா என்பது தெரியாத நிலைமையில் திமுக கூட்டணி இருக்கிறது. பாஜக கூட்டணி அதைவிட மோசமாக இருக்கிறது.

சில கோடிகளைக் கொடுத்து தமிழக காங்கிரஸை பையில் போட்டுக்கொண்டது. ஆனால், உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் தான் இருக்கிறது. சிறுபான்மை மக்களோட திமுகவின் சாயம் வெளுத்து போய்விட்டது. அதனாலேயே திமுக, பாஜகவினர் என்மீது கோபத்தில் உள்ளனர். எவ்வளவு அவதூறுகள் நம் மீது பரப்புகின்றனர். கரூர் விவகாரத்தில் நம் மீது பழியைப் போட்டார்கள். பிறகு, எனது படத்தை முடக்கினார்கள். எஸ்.பி போட்டு நமக்கு மட்டும் புது ரூல்ஸ் போட்டு மக்களை சந்திக்கவிடாமல் தடுக்கிறார்கள்.

 விஜய்

எத்தனை சோதனைகள் கொடுத்தாலும் பாஜகவாலோ, திமுகாவாவோ என்னை மக்களிடம் இருந்து என்னைப் பிரிக்க முடியாது. இவ்வளவு காலம் யார்யாருக்கோ வாக்களித்தீர்கள் இந்த முறை நமக்கு நாமே வாக்களிக்க போகிறோம். இப்படியோரு தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே பார்த்திருக்கிறது. இது அதிசய தேர்தல்.. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது போன்றது. ஒரு எம்ஜிஆர், ஒரு காமராசர், ஒரு அண்ணா மாதிரி யாரும் வர மாட்டார்களா? என்று நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காக தான் தவெக வந்துள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவின் எஃகு கோட்டை 'சேலம்'.. தொகுதிகளின் நிலவரம் என்ன?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai