Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TNElection2026 | 6 இடங்களில் தவெக வெற்றி.. வரலாறு காணாத வாக்குசதவீதம்!

TNElection2026 | 6 இடங்களில் தவெக வெற்றி.. வரலாறு காணாத வாக்குசதவீதம்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரலாறு காணாத வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

கோபிசெட்டிப்பாளையம், அண்ணா நகர், தூத்துக்குடி, தாம்பரம், மதுரை தெற்கு, தஞ்சை ஆகிய 6 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, மாநில அரசியல் சமநிலையை மாற்றியுள்ளனர்.

தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.

 திமுக - அதிமுக

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தன.

 தவெக தலைவர் விஜய்

இந்தசூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்குதள்ளியிருக்கும் தவெக 35% சதவீதத்திற்கும் மேலான வாக்குசதவீதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

6 இடங்களில் தவெக வெற்றி..

இதுவரையிலான அப்டேட்டின் படி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள், கோபிசெட்டிபாளையம், அண்ணா நகர், தூத்துக்குடி, தாம்பரம், மதுரை தெற்கு, தஞ்சை ஆகிய 6 தொகுதிகளில் வெற்றியை பதிவுசெய்துள்ளன.

 செங்கோட்டையன்

கோபிச்செட்டிப்பாளையத்தில் தொடர்ச்சியாக 5-வது முறையாக செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், 10-வது முறையாக சட்டமன்றம் செல்கிறார்.

தற்போதைய தேர்தல் நிலவரத்தின் படி தவெக 107 இடங்கள், திமுக 58 இடங்கள் மற்றும் அதிமுக 51 இடங்களில் முன்னிலைபெற்றுள்ளன.

TNElection2026 | சென்னையில் ஆதிக்கம் செலுத்தும் தவெக.. முக ஸ்டாலின் பின்னடைவு!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai