Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உசைன் போல்ட்டின் அதிவேக சாதனையை முறியடித்த ரோபோ!

உசைன் போல்ட்டின் அதிவேக சாதனையை முறியடித்த ரோபோ!

சீனாவில் நடைபெறும் சர்வதேச ரோபோ விளையாட்டு போட்டியில் ஆனர் நிறுவனம் உருவாக்கிய 'லைட்னிங்' ரோபோ 100 மீட்டர் ஓட்டத்தை 9.39 விநாடிகளில் முடித்து, உசைன் போல்ட் உலக சாதனையை விட வேகமாக இலக்கை அடைந்தது.

அதே போட்டியில் 'டியன்காங்' ரோபோ 400 மீட்டரை 38.15 விநாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்றது. சில ரோபோக்கள் தடுப்பில் மோதியும் பாதியில் விழுந்தும் சிக்கல்கள் ஏற்பட்டன.

சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ விளையாட்டு போட்டிகளில் இயந்திர மனிதர்கள் வெளிப்படுத்தும் திறன் வியக்கவைப்பதாக உள்ளது. சீனாவின் ஆனர் நிறுவனம் உருவாக்கிய லைட்னிங் என்ற பெயர் கொண்ட ரோபோ 100 மீட்டர் தொலைவை 9 நொடி 39 விநாடிகளில் ஓடி வெற்றிபெற்றது. உசைன் போல்ட் படைத்த உலக சாதனையை விட குறைவான நேரத்தில் லைட்னிங் ரோபோ 100 மீட்டரை கடந்துள்ளது.

 உசைன் போல்ட்

இதே போல 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீன நிறுவனம் தயாரித்த டியன்காங் ரோபோ தங்கப்பதக்கம் பெற்றது. இந்த ரோபோ 400 மீட்டரை 38.15 நொடியில் கடந்தது. எனினும் சில ரோபோக்கள் தடுப்பில் மோதியதுடன் பாதியில் தடுமாறி விழுந்த நிகழ்வுகளும் கூட இப்போட்டியின்போது அரங்கேறின.

1 1/2 நாளில் முடிந்த டெஸ்ட்.. திட்டமிட்டே செய்ததா ஆஸி? இந்தியா என்றால் மட்டும் இளக்காரமா?
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai