Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வரலாற்றில் முதல்முறை.. சட்டமன்றத்தின் புதிய செயலராக பொறுப்பேற்றார் சாந்தி!

வரலாற்றில் முதல்முறை.. சட்டமன்றத்தின் புதிய செயலராக பொறுப்பேற்றார் சாந்தி!

ட்டப்பேரவையின் முதன்மைச் செயலாளராக, 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட சீனிவாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் அதே பதவியில் பதவி நீட்டிப்பு பெற்று தொடர்ந்தார்.

சட்டப்பேரவை செயலகம் தொடர்பான பணிகளில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதோடு அப்போதைய முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவராகவும் சீனிவாசன் அறியப்பட்டார். இவரது, பதவிக்காலம் 2023 ஆண்டே முடிவடைந்த நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

 சீனிவாசன்

அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைந்த பின்னரும், சட்டப்பேரவைச் செயலாளராக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் நேற்றைய முன்தினம் வழங்கியுள்ளார். இதையடுத்து, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான புதிய செயலராக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் செயலர் என்ற வரலாற்றை படைத்திருக்கிறார்.

சசட்டமன்றச் செயலகத்தின் மிக முக்கியமான அதிகாரியான சட்டமன்றச் செயலாளர், சட்ட விதிகள், நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து சபாநாயகருக்கு முதன்மை ஆலோசகராகப் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை 12 மணிக்கு அறிவிப்பு!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai