வெள்ளி விழா ஆண்டு:
நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா 25ம் ஆண்டு மின்னணு தொடர்பியல் மற்றும் மின், மின்னனுவியல் பொறியியல் துறை மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை சார்பில் 25வது ஆண்டு முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பதவி வகிக்கும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு எம். குழுவின் உறுப்பினர் எல்.ஆர். பிரியா தலைமை உரையாற்றினார். அப்போது, முன்னாள் மாணவர்களின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டினார். அவர்கள் கல்லூரியுடன் தொடர்ந்து நல்கி வரும் ஒத்துழைப்பை ஊக்குவித்தார்.
முன்னாள் மாணவர் சங்க இயக்குநரும். கல்லூரியின் பொது மேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார் பாராட்டு உரையை நிகழ்த்தினார், அப்போது கல்லூரி நிறுவனத்தின் பாரம்பரியத்தை வடிவமைப்பதில் முன்னாள் மாணவர்கள் ஆற்றிய சிறப்பான பங்கை எடுத்துக்காட்டினார். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர், தங்களது 25 ஆண்டுகால தொழில்முறை சிறப்பையும் கல்லூரியுடனான தொடர்பையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக alumniportal.francisxavier.ac.in- என்ற புதிய இணையதளத்தை முன்னாள் மாணவர் சங்க பொருளாளருமான முனைவர் மனோகர் அறிமுகப்படுத்தினார். இதில் முன்னாள் மாணவர்கள் வலை தள த்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து பதிவு செய்து, பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் ஸ்காட் குழும பொதுமேலாளர் ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வளாக மேலாளர் சகரியா கேப்ரியல் வழிகாட்டுதலின் பேரில் மின்னணு துறை தலைவர் முனைவர் பிரிஸ்கா, மின் மற்றும் மின்னணு துறை தலைவர் முனைவர் ரவி, ஒருங்கிணைப்பாளர் அமலா, செயலாளர் முத்துராமன் மற்றும் அனந்த் ஆகியோர் செய்திருந்தனர் .