தமிழக முதல்வர் தளபதி விஜய்யின் பதவியேற்பு விழாவில் நீல நிறப் புடவையில் தேவதை போல தோன்றிய த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவரது சரும பராமரிப்பு முறை என்ன என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு நீல நிறப் புடவையில் வந்திருந்த நடிகை த்ரிஷாவை பார்த்த ரசிகர்கள், இவருக்கு மட்டும் வயசே ஆகாதா என்று ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
43 வயதிலும் தனது சருமத்தை இவ்வளவு பொலிவாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் த்ரிஷா எப்படிப் பராமரிக்கிறார் என்கிற தேடலும் இணையத்தில் அதிகரித்துள்ளது.ஜங்க் உணவு தவிர்த்தல்

த்ரிஷா உணவு விஷயத்தில் அதிக கவனமாக இருப்பதே, சரும ஆரோக்கியத்தின் ரகசியம் ஆகும். ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கிறார். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மட்டுமே சாப்பிடுகிறார். நாம் சாப்பிடும் உணவுகள் சரும ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கிறது என்பதை அதிகம் நம்புகிறார்.
cureus part of springer nature இதழில் வெளியான ஆய்வின்படி, ஊட்டச்சத்து குறைபாடு - அதிகப்படியான ஆரோக்கியமற்ற உணவுகள் நுகர்வு - செயற்கை கலவைகள் ஆகியவை, சரும ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சரும ஆரோக்கியத்திற்கு புரோட்டீன், வைட்டமின், ஆன்டிஆக்ஸிடன்டு நிறைந்த உணவுகள் அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
மேஜிக் 'மார்னிங் ட்ரிங்க்'

த்ரிஷா தனது காலைபொழுதை கிரீன் டீ அல்லது எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான தண்ணீருடன் தொடங்குகிறார். இந்த பானங்கள் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி அதிகாலையிலேயே உடலை 'அல்கலைன்'நிலைக்கு மாற்றுகிறது. அதாவது, உடல் அமிலத்தன்மை நீங்கி சமநிலையில் இருக்கும்போது, சருமம் இயற்கையாகவே ஜொலிக்க தொடங்கும்.
சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுதல்

த்ரிஷா தனது தினசரி உணவு முறையில் சிட்ரஸ் பழங்களை அதிகமாக சேர்த்துகொள்கிறார். எலுமிச்சை, ஆரஞ்சில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் சருமத்திற்கு நிறைய சத்துக்கள் அளிக்கிறது. சரும நெகிழ்வுத்தன்மை மேம்படுத்தி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ஜிம்முக்கு சென்று தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார். பைலேட்ஸ், ஸ்ட்ரென்ச் ட்ரெய்னிங், கார்டியோ போன்ற பயிற்சிகளை செய்கிறார். தொடர்ச்சியான பயிற்சிகள் நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
நேஷனல் லைப்பரி ஆப் மெடிசனில் வெளியான ஆய்வின்படி, தொடர்ச்சியான பயிற்சி சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சருமத்தில் ஈரப்பதம் மேம்படவும் உதவுகிறது. ஒட்டுமொத்த சரும தோற்றத்தை அழகாக மாற்ற செய்கிறது.
43 வயதிலும் த்ரிஷா இவ்வளவு அழகாக இருப்பதற்கு பின்னால் இருப்பது விலையுயர்ந்த சிகிச்சைகள் அல்ல; அவர் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை மட்டுமே ஆகும். நல்ல உணவு, நீர்ச்சத்து, உடற்பயிற்சி மற்றும் மன மகிழ்ச்சி ஆகிய நான்கு இருந்தால் அனைவரும் த்ரிஷா போல் எவர்கிரீன் அழகை பெற முடியும்.

