Dailyhunt
அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்பட 6 காரணங்கள் மற்றும் சரிசெய்யும் வழிகள்

அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்பட 6 காரணங்கள் மற்றும் சரிசெய்யும் வழிகள்

Samayam Tamil 1 week ago

யிறு உப்புசம், பலரும் சந்திக்கும் செரிமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் உணவு சாப்பிட்ட பிறகு அல்லது சில பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்காக இரைப்பை குடலியல் நிபுணர் Dr.வீரேந்திர கவுஜலகி அணுகியபோது, வயிறு உப்புசத்திற்கு உணவு பழக்கவழக்கங்கள், குடல் உணர்திறன் மற்றும் செரிமான கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்றார்.

வயிற்று உப்பசம் ஏற்படுவதற்கான காரணங்கள்

1. சாப்பிடும் முறை - மிக வேகமாக சாப்பிடுவது அதிகப்படியான காற்றை விழுங்க நேரிடும். இதனால் வயிறு நிரம்பியது போலவும் இறுக்கமான உணர்வும் ஏற்படும்

2. வாயு உண்டாக்கும் உணவுகள் - பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் மற்றும் கார்பனேட் பானங்கள் குடலில் வாயுவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

3. உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் - அதிக சோடியம் உணவுகள் உடலில் நீரை தக்கவைத்து, வயிறு உப்புசமாகவும் கனமாகவும் வைத்திருக்கும்.

4. உணவு ஒவ்வாமை - சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் குளூட்டன் அலர்ஜி இருக்கக்கூடும். மீறி சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும்

5. செரிமான குறைபாடுகள் - எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பாதிப்பு உள்ளவர்கள் நாள்பட்ட வயிறு உப்புசத்தால் அவதிப்படுவார்கள். இதனுடன் வயிற்று வலி அல்லது சீரற்ற குடல் இயக்கம் இருக்கும்.

6. ஹார்மோன் மாற்றங்கள் - அதிக மன அழுத்தம் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், குடல் இயக்கத்தை பாதித்து வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும்.


வயிறு உப்புசம் சரிசெய்யும் வழிகள்

  • உணவை நன்றாக மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும்
  • போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக பராமரிக்கவும்
  • நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். நார்சத்தை திடீரென அதிகரிக்காமல் படிபடியாக உயர்த்துவது நல்லது
  • தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது குடலில் வாயு தேங்குவதை குறைக்கும்.
  • தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகள் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

  • தொடர்ச்சியாக ஏற்படும் வயிறு உப்புசம்
  • வயிற்று வலி
  • காரணமின்றி உடல் எடை குறைதல்
  • மலச்சிக்கல் மாற்றங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரைச் சந்திப்பது அவசியம்

முறையான உணவு பழக்கம், போதிய உடற்பயிற்சி மற்றும் மன அமைதி ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான வயிற்று உப்பசம் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். பிரச்சனை நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது.

மருத்துவ நிபுணர் ஆலோசனை

பெங்களூரு எலஹங்கா SPARSH மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் Dr.வீரேந்திர கவுஜலகி (Gastroenterology, Hepatology & Nutrition), சமயம் திமிழுக்கு அளித்த தகவலின்பேரில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil