ஜோதிட குறிப்புகளில் ஏப்ரல் மாதம் வரும் பௌர்ணமி 'இளஞ்சிவப்பு நிலவு (Pink Moon)' என அழைக்கப்படுகிறது.
பெயரளவில் மட்டும் இளஞ்சிவப்பு நிலவு என அழைக்கப்படும் இந்த பௌர்ணமி வசந்த காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் நாள் மீண்டும் ஒரு முறை நிகழவிருக்கும் இந்த அற்புத வானியல் நிகழ்வு, துலாம் ராசியில் உதயமாகிறது. இதன் தாக்கம், மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது!
ஏப்ரல் 1, 2026 அன்று காணப்படும் இந்த இளஞ்சிவப்பு நிலவு (பிங்க் மூன்): காதல், அழகு, ஆடம்பரத்தை பிரதிபலிக்கும் சுக்கிரனால் ஆளப்படும் காற்று ராசியான துலாம் ராசியில் நிகழ்கிறது. பொதுவாக இந்த இளஞ்சிவப்பு நிலவு ஆனது புதுப்பித்தல், மறுபிறப்பு, வளர்ச்சி, புத்துயிர், புதிய தொடக்கத்தை குறிக்கிறது. அந்த வகையில் உங்கள் வாழ்க்கையில் (உங்கள் ராசிக்கு) என்ன பலன் கொண்டு வருகிறது? எந்த வகையான மாற்றங்களை கொண்டு வருகிறது? என இங்கு நாம் காணலாம்!மேஷம் - புதிய தொடக்கம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய தொக்கத்தை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பத்தை கொண்டு வரும், மன மகிழ்ச்சியான விஷயங்களை கொண்டு வரும். திருமணம் முடித்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை காண்பார்கள், தொழில் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த திருப்பத்தை கொண்டு வரும்.
ரிஷபம் - மன அமைதி!

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மன அமைதிக்கான வாய்ப்பு கொண்டு வரும் ஒரு முழு நிலவு தினமாக இந்த ஏப்ரல் மாத பௌர்ணமி தினம் பார்க்கப்படுகிறது. தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிற்கும் இடையே ஒரு ஆரோக்கிய சமநிலையை உண்டாக்கலாம். உங்கள் வாழ்க்கையில் காணப்பட்ட குழப்பங்கள் மற்றும் சிரமங்களுக்கு தீர்வு காணலாம். எதிர்காலம் தொடர்பான தெளிவு பிறக்கும் - பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மிதுனம் - படைப்பாற்றல் மேம்படும்!

மிதுன ராசியினருக்கு இந்த முழு நிலவு தினம், படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு தினமாக இருக்கும். கலைத்துறையில் இருக்கும் நபர்கள், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு பெறுவார்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வார்கள். எழுத்து, இலக்கணம், ஓவியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சாதகமான ஒரு காலமாக இது இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடகம் - ஆதரவு!

கருணை உள்ளம் கொண்ட கடக ரசியினருக்கு இந்த முழு நிலவு தினம், வீட்டிலும் - அலுவலகத்திலும் எதிர்பார்த்த ஆதரவை பெற்று தரும். மூத்த ஊழியர்களின் வழிகாட்டுதல், உங்கள் விருப்பமான பணிகளை எடுத்து செய்ய அனுமதிக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆதரவு, குடும்பத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவி செய்யும். உறவில் மகிழ்ச்சியை மீட்டு கொண்டு வரும். மன அமைதிக்கான வாய்ப்புகள் பிறக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சிம்மம் - பல்துறை வெற்றி!

ஆளுமை பண்புகளுக்கு பெயர் பெற்ற சிம்ம ராசியினருக்கு சாதகமான ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக உங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு உங்களை தேடி வரும். மன நிறைவான தருணங்கள் உங்களை தேடி வரும். பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை. கனிவாக பேசுங்கள், மகிழ்ச்சியான தருணங்களை அனுபவியுங்கள்!
கன்னி - சேமிப்பு!

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சேமிப்புக்கான வாய்ப்பை கொண்டு வரும் ஒரு தினமாக இது பார்க்கப்படுகிறது. பிங்க் நிலவின் நேர்மறையான ஆற்றல், உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் சேமிப்பு திட்டங்களை தொடங்குவீர்கள். வீண் செலவுகள் குறையும், உங்கள் பொருளாதார நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் உடன் பிறந்தவர்களின் தொழிலுக்கு நிதி உதவி செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்!
துலாம் - தேவைகள் பூர்த்தியாகும்!

துலாம் ராசியில் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் பூர்த்தியாகும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள், குடும்ப வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றங்களை நீங்கள் காணலாம். அரசு பணி எதிர்பார்க்கும் நபர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது.
விருச்சிகம் - மன அமைதி!

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் மன அமைதியான தருணங்களை அனுபவிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பல நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக, காதல் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் இதே நிலை நீடிக்கும். நிம்மதியான இரவு உறக்கம் கிடைக்கும்!
தனுசு - தடைகள் நீங்கும்!

தனுசு ராசி கொண்டவர்களின் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகள் நீங்கும், புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், குறிப்பாக உயர் அதிகாரிகளின் ஆதரவு பெற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர் பதவி காணும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களை தேடி வரும், வெற்றி உங்கள் வீட்டு கதவை தட்டும்.
மகரம் - முன்னேற்றம்!

மகர ராசியில் பிறந்தவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் வாய்ப்பை பெறுவார்கள். குறிப்பாக, தொழில் வாழ்க்கையில் உங்கள் முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரும். அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் வாய்ப்பும் கொண்டு வரும். பணம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அளிக்கும்.

