Dailyhunt
'ஏப்ரல் 11, 2026 சனி - புதன் சேர்க்கை'; எந்தெந்த ராசிக்கு சாதகமாக இருக்கும்

'ஏப்ரல் 11, 2026 சனி - புதன் சேர்க்கை'; எந்தெந்த ராசிக்கு சாதகமாக இருக்கும்

Samayam Tamil 1 month ago

றிவாற்றல், பேச்சாற்றல், படைப்பாற்றலை பிரதிபலிக்கும் புதன் கிரகத்தின் அசைவு ஒவ்வொன்றும் வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி வரும் புதன், கடந்த பிப்ரவரி 3, 2026 செவ்வாய் இரவு 09:54 PM தொடங்கி கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 11, 2026 சனிக்கிழமை அதிகாலை 01:20 AM மணியளவில் மீன ராசியில் குடியேறுகிறார். மீன ராசியில் குடியேறும் புதன், அங்கு ஏற்கனவே குடியிருக்கும் சனி பகவானுடன் இணைந்து சிறப்பு பலன்களை கொண்டு வருகிறார்.


இன்னும் இரண்டு திடங்களில் சனியுடன் இணையும் புதன், தனி நபரின் வாழ்க்கையில் மாறுபட்ட பலன்களை கொண்டு வருகிறார். தனி நபரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் ஒரு கிரகமாக சனி பார்க்கப்படுகிறது; அதேநேரம் தனி நபரின் அறிவாற்றல், பேச்சாற்றல், புத்தி கூர்மை, படைப்பாற்றலை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக புதன் பார்க்கப்படுகிறது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மகத்தான மாற்றங்களை கொண்டு வரும், குறிப்பாக தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. தனி நபரின் ஆளுமை பண்புகளை மேம்படுத்தும், நிதி நிலையை சிறப்பாக மாற்றும் எனவும் நம்பப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது நிகழும் இந்த மாற்றம் ரிஷபம், தனுசு மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசியினருக்கு நேர்மறையான பலன்களை கொண்டு வரும் என கணிக்கப்பட்டுள்ளது.ரிஷபம் - லாபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கிரக நிலை மாற்றானது. உங்கள் வருமான ஆதாரங்களை அதிகரிக்கும் வாய்ப்பும் கிடைக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானத்தை கொண்டு வருவீர்கள், உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கி குவிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், குடும்ப உறவுகளின் ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம், முன்னர் செய்த முதலீடுகள் வழியே போதுமான வருமானத்தை கொண்டு வரும் வாய்ப்பும் காணலாம். புதிய தொழில் தொடங்க விரும்பும் நபர்களுக்கு சாதகமான ஒரு காலத்தை கொண்டு வரும், பெற்றோர் ஆதரவும், சகோதர உறவின் நிதி உதவியும் கிடைக்கும்.

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த, உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தை நீங்கள் காணலாம். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், சக ஊழியர்களுடன் இணக்கமான ஒரு உறவை பராமரிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையுடன் களத்தில் இறங்கி செயல்படுங்கள்!


தனுசு - மகிழ்ச்சி!

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான காலத்தை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை காணலாம், வாழ்க்கை துணையுடன் காணப்பட்ட மனஸ்தாபங்களை முடிவுக்கு கொண்டு வரலாம். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்கள் உங்கள் பக்கம் முடிவாகும், சகோதர உறவுடன் காணப்பட்ட பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

உங்கள் ராசியில் 4-ஆம் வீட்டில் உண்டாகும் மாற்றம், நிதி சார்ந்த விஷயங்களில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும். தொழில் வாழ்க்கையில் நிலையான வெற்றியை கொண்டு வரலாம். அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்கள், தங்கள் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் விருப்பமான பணிகளை எடுத்து செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். வணிகம், வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் நேர்மறையான பலனை காணலாம்.

தொழில் வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் வாய்ப்பும் கிடைக்கும். காதல் வாழ்க்கை, மண வாழ்க்கை இரண்டிலும் நேர்மறையான மாற்றத்தை நீங்கள் கொண்டு வரலாம். கூட்டாண்மையில் தொழில் செய்து வரும் நபர்களுக்கும் சாதகமான ஒரு காலத்தை கொண்டு வரும் வாய்ப்புகள் காணப்படுகிறது.


மீனம் - சாதகமான காலத்தை கொண்டு வரும்

மீன ராசியின் ஜாதகத்தில் லக்ன வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கிரக பெயர்ச்சி, அவர்களின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் சாதகமான காலத்தை கொண்டு வருகிறது. ஆளுமை பண்புகளை மேம்படுத்தும், தெளிவான முடிவுகளை எடுக்கவும் உதவியாக இருக்கும்.

தொழில் வளர்ச்சி தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்பார்த்த பலனை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். சர்வதேச அளவில் உங்கள் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பினை கொண்டு வரலாம். உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள், தொழில் துறையில் சாதனைகள் பல செய்யும் வாய்ப்பும் காணப்படுகிறது.

பண விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள், எதிர்பார்த்த நற்பலனை கொண்டு வரும். பொருளாதார ரீதியாக உங்களை பலப்படுத்தும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பணியிடத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பணிகளை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் உங்களை தேடி வரும், நம்பிக்கையுடன் காத்திருங்கள்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil