Dailyhunt
ஏப்ரல் 2026 மாத ராசிபலன்; அனைத்து ராசிகளுக்குமான ஜோதிட கணிப்புகள்

ஏப்ரல் 2026 மாத ராசிபலன்; அனைத்து ராசிகளுக்குமான ஜோதிட கணிப்புகள்

Samayam Tamil 2 weeks ago

டப்பு 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் குறிப்பிடத்தக்க கிரக நிலை மாற்றங்களை சந்திக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 2-ஆம் நாள் நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, ஏப்ரல் 14-ஆம் நாள் நிகழும் சூரியன் பெயர்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்க திருப்பங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் நம் ராசிக்கு என்ன பலன் கொண்டு வரும், இம்மாதம் ஒவ்வொரு ராசியும் எதிர்பார்க்கும் பலன்கள் என்ன? எதிர்பார்ப்புகள் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக நாம் காணலாம்!


வேத ஜோதிட கணிப்புகள் படி நடப்பு ஏப்ரல் மாதம் புத்துணர்ச்சி கொண்டு வரும் ஒரு மாதம் ஆகும். தனி நபரின் ஆற்றலை மேம்படுத்தும், அவர்களின் இலக்கை நோக்கி பயணிக்க உத்வேகம் அளிக்கும், உள்ளுணர்வுகளின் வலிமையை அதிகரிக்கும், நல்வாழ்வுக்கு உதவும் வழிகளை காண்பித்து தரும் என நம்பப்படுகிறது. இம்மாதம் நிகழும் வானியல் மாற்றங்கள், மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.மேஷம் - ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக, சரும ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருங்கள். பணியிடத்தில் அலைச்சல் நிறைந்திருக்கும், பணிகளுக்கு இடையே போதுமான ஓய்வு மற்றும் ஆரோக்கிய உணவு வழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிகாக்கலாம். செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது!


ரிஷபம் - காதல் வெற்றி!

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரும் ஒரு மாதமாக இது அமையும். குறிப்பாக, காதல் துணை இன்றி சிங்கிளாக இருக்கும் நபர்கள், தங்கள் குணத்திற்கு பொருத்தமான நபரை கண்டறிவார்கள்; ஏற்கனவே காதல் உறவில் இருக்கும் நபர்கள் தங்கள் காதல் உறவை திருமணம் எனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பும் காணப்படுகிறது. உடன் பிறந்தவர்களுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும், வீட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும்!


மிதுனம் - புதிய வாய்ப்புகள் கிடைக்கும்!

​மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நடப்பு ஏப்ரல் மாதம், புதிய தொழில் வாய்ப்புகளை கொண்டு வருகிறது. நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்களை தைரியமாக எடுத்து செய்வீர்கள், நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பீர்கள். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.


கடகம் - வளர்ச்சி!

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தலைமை பதவி கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. இம்மாதம் நடுப்பகுதியில் நிகழும் சூரியன் பெயர்ச்சி, கடக ராசி கொண்டவர்களின் ஆளுமை பண்புகளை மேம்படுத்துகிறது. இரும்பு, தங்கம், வெள்ளி தொடர்பான தொழில் செய்து வரும் நபர்களுக்கு சாதகமான ஒரு காலமாகவும் இது அமையும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உங்கள் வருமானத்தை பல மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.


சிம்மம் - பயணங்கள் பல செய்வீர்கள்!

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர், கல்விக்காக அல்லது தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் பல செய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக, உயர் கல்வி படிக்க வெளிநாடு செல்ல காத்திருக்கும் மாணவர்கள், அரசு உதவி தொகையுடன் வெளிநாடு சென்று உயர் கல்வி கற்பார்கள். படித்து முடித்து பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கும், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.


கன்னி - நிதி நிலை மேம்படும்!

ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பெயர் பெற்ற கன்னி ராசியினர், தங்கள் பொருளாதார நிலையை பலப்படுத்தும் வாய்ப்பினை பெறுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களில் இருந்து வருமானத்தை கொண்டு வரும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஜவுளி துறையில் இருக்கும் நபர்கள், தங்கள் துறையில் எழுச்சி காண்பார்கள். இறக்குமதி - ஏற்றுமதி சார்ந்த தொழிலிலும் கால் பதிப்பார்கள்.


துலாம் - மகிழ்ச்சி!

துலாம் ராசி கொண்டவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. உறவில் நீங்கள் கடைபிடிக்கும் நேர்மை, நேர்மறையான திருப்பங்களை கொண்டு வரும். உறவில் காணப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மனஸ்தாபங்களுக்கு முடிவு கொண்டு வரும். குழந்தை பாக்கியம் தொடர்பான நற்செய்திகளும் உங்களை தேடி வரும். நம்பிக்கையுடன் இருங்கள்!


விருச்சிகம் - வளர்ச்சி!

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் நிகழும் கிரக நிலை மாற்றங்கள், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டு வரும். தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள், தங்கள் தனித்திறகளையும் வெளிப்படுத்துவார்கள். காதல் வாழ்க்கை / திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை மீட்டு கொண்டு வரும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.


தனுசு - வருமானம்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு லாபகரமான ஒரு காலமாக இந்த ஏப்ரல் மாதம் இருக்கும். செய்யும் தொழிலில் போதுமான வருமானம் கிடைக்கும், கிடைக்கும் வருமானத்தை ஆக்கப்பூர்வமான முறையில் முதலீடு செய்து, எதிர்காலத்தை வலப்படுத்தும் வாய்ப்பும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும், சகோதர உறவின் ஆதரவுடன் புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்!


மகரம் - மரியாதை!

மகர ராசியில் பிறந்தவர்கள் தங்கள் திறமைக்கான அங்கீகாரம், வெகுமதியை காணும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக நீங்கள் காணும் வளர்ச்சி, உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும். சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளில் உங்கள் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பெயர் கௌரவிக்கப்படும். இதனிடையே ஒரு சில சவால்களும் வந்துச் செல்லும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil