Dailyhunt
ஏப்ரல் 7 மங்கள யோகம்; ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள்

ஏப்ரல் 7 மங்கள யோகம்; ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள்

Samayam Tamil 3 weeks ago

ப்ரல் 7, 2026 செவ்வாய் கிழமை சிறப்பு தினமான இன்று, செவ்வாய் கிரகத்தின் சிறப்பு சேர்க்கையால் சுபிக்ஷமான மங்கள யோகம் காணப்படுகிறது.

இதனுடன், சந்திரனிலிருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாயும் சூரியனும் இணைவதால் மங்கள ஆதித்திய யோகமும், சந்திரனிலிருந்து ஆறாம் வீட்டில் சுக்கிரனும் - எட்டாம் வீட்டில் குருவும் இருப்பதால் சந்திராதி யோகமும் காணப்படுகிறது. இன்று காணப்படும் இந்த சுப யோகங்களின் சேர்க்கை ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசியினருக்கு சுபிக்ஷமான காலத்தை கொண்டு வரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்!


வேத ஜோதிடத்தில் மங்கள யோகம் எனப்படுவது; சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய சுப கிரகங்களுடன் செவ்வாய் இணையும் போது மங்கள யோகம் உருவாகிது. இந்த சிறப்பு யோகமானது தனி நபரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும், செல்வ வரவு - மன வலிமை, தைரியத்தை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள், மனஸ்தாபங்களுக்கு தீர்வு கொண்டு வரும். இந்நிலையில் இன்று காணப்படும் இந்த சிறப்பு யோகத்தின் சேர்க்கை யாருக்கு என்ன பலன் கொண்டு வரும் என்பது குறித்து இங்கு காணலாம்!ரிஷபம் - மங்களம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மங்களகரமான மாற்றத்தை கொண்டு வரும் ஒரு சிறப்பு தினமாக இது இருக்கும். சந்திரன் உங்கள் ராசியில் 7-வது வீட்டிலும், சுக்கிரன் 12-வது வீட்டிலும் சஞ்சாரம் செய்ய, உங்கள் எதிர்பார்ப்புகள் பல பூர்த்தியாகும். பணியிடத்தில் உங்கள் நேர்மைக்கான பலன் உங்களை தேடி வரும்.

கடின உழைப்புக்கான வெகுமதி, புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், மூத்த அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும், தொழிலை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், விரும்பும் இடத்திற்கு பணியிட மாற்றமும் சாத்தியமாகும்.


மிதுனம் - மகிழ்ச்சி

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் அன்பும் - நல்லிணக்கமும் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு பிரச்சனையாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும், உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்கும் வாய்ப்பும் உங்களை தேடி வரும்.

ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் நேர்மறையான மாற்றங்களை காணலாம். நிதி சார்ந்த விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக, பங்குச்சந்தை முதலீடுகள், எதிர்பார்த்த லாபத்தை கொண்டு வரும். பொருளாதார ரீதியாக உங்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.


கன்னி - அங்கீகாரம்

​கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், முக்கியத்துவம் வழங்கப்படும். உடன் பிறந்தவர்களுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள், முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளுடன் இணைந்து வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள், ஆன்மீக சுற்றுலாவுக்கு வாய்ப்பு காணப்படுகிறது.

கல்வி, கற்பித்தல் தொடர்பான துறையில் இருக்கும் நபர்களுக்கு சாதகமான ஒரு காலமாக இது இருக்கும். மருத்துவம் பயிலும் மாணவர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பு காணப்படுகிறது. ஜவுளி, வர்த்தகம், ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த தொழில் செய்து வரும் நபர்களுக்கும் சாதகமான ஒரு காலமாக இது அமையும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


துலாம் - லாபம்

துலாம் ராசியினர் ஜாதகத்தில் 2-ஆம் வீட்டில் சந்திரனும், ஏழாம் வீட்டில் சுக்கிரனும் மாற்றத்தை கொண்டு வருகின்றனர். இதன் தாக்கம், தொழில் வாழ்க்கையில் லாபகரமான காலத்தை கொண்டு வருகிறது. தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் கொண்டு வருகிறது. படித்து முடித்து பணி வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.

குறிப்பாக, அரசு பணி எதிர்பார்த்து போட்டி தேர்வு எழுதி வரும் நபர்களுக்கும் சாதகமான ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. தந்தை மற்றும் குடும்ப உறவுகளின் ஆதரவு உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகளும் கிடைக்கும். உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்களுக்கு தொழில் வளர்ச்சி காணும் ஒரு காலமாகவும் இது அமையும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


மகரம் - மகிழ்ச்சி!

மாற்றத்தை விரும்பும் மகர ராசியினரின் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டம், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும், உங்கள் கடின உழைப்புக்கான பலனும் உங்களை தேடி வரும். தனது குடும்ப உறவுகளை பிரிந்து வெளிநாட்டில் பணியாற்றி வரும் நபர்களுக்கு, எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கும் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும், உங்கள் விருப்பமான பொருட்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குறிப்பாக, மோட்டார் வாகனம் வாங்கும் வாங்கும் வாய்ப்பு காணப்படுகிறது. நண்பர்களுடன் இணைந்து வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள், எதிர்காலத்தில் நினைத்து அசைபோடும் அளவுக்கு இனிமையான தருணங்களையும் உண்டாக்குவீர்கள்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil