Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஏடிஎம் முதல் சிலிண்டர் விலை வரை: செப்டம்பர் மாதம் எல்லாம் மாறப் போகுது

ஏடிஎம் முதல் சிலிண்டர் விலை வரை: செப்டம்பர் மாதம் எல்லாம் மாறப் போகுது

Samayam Tamil 2 weeks ago

ந்த மாற்றங்கள் அனைத்தும் உங்களுடைய மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கும்.

வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த இந்த முக்கியமான விதிமுறைகள் மாறுகின்றன.
அதுகுறித்து பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.செப்டம்பர் மாத மாற்றங்கள்!

இன்னும் ஓரிரு நாட்களில் ஆகஸ்ட் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது. வழக்கம்போல, இந்த மாதமும் 1ஆம் தேதியன்று பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை சாமானிய மக்களின் பட்ஜெட் மற்றும் நிதி நிலையை பாதிக்கும். சமையலறைச் செலவுகள் முதல் வங்கிச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணம் வரை பல்வேறு துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றும். விமான எரிபொருள் (ATF) மற்றும் சிஎன்ஜி (CNG) விலைகளிலும் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.


சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்குமா?

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலேயே செய்யப்படுகின்றன. எனவே, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம். விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் சமையலறை பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 202 குறைக்கப்பட்டது. அதேவேளையில், 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


போர்டிங் பாஸ்களில் முத்திரையிடும் விதிமுறை!

வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விதிமுறை ஒன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாறவுள்ளது. இனி போர்டிங் பாஸ்களில் முத்திரையிட வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், சர்வதேச பயணிகள் விமான நிலையக் குடியேற்றப் பிரிவு (immigration) கவுண்டர்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. பயணிகள் தங்கள் மொபைல் போனில் உள்ள 'இ-போர்டிங் பாஸ்' அல்லது அதன் அச்சிடப்பட்ட நகலைக் காண்பிப்பதன் மூலமே குடியேற்றச் சோதனையைக் கடந்து செல்ல முடியும். குடியேற்றச் செயல்முறையை எளிமையாகவும் விரைவாகவும் மாற்றுவதற்காக குடியேற்றப் பிரிவு இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.


சிலிண்டர் e-KYC காலக்கெடு நீட்டிப்பு!

உங்கள் சமையல் சிலிண்டர் இணைப்பிற்கான e-KYC சரிபார்ப்பை முடிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அதாவது, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இதைச் செய்து முடிக்கலாம். IOCL, BPCL மற்றும் HPCL ஆகிய நிறுவனங்கள் இதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 23லிருந்து ஆகஸ்ட் 31க்கு நீட்டித்துள்ளன. இருப்பினும், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் e-KYC சரிபார்ப்பை முடிக்காவிட்டால் செப்டம்பர் 1முதல் அதிக விலையில் கேஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.


ATF, CNG மற்றும் PNG விலைகளில் மாற்றம்!

விமான எரிபொருள் (ATF) விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றியமைக்கின்றன. இது விமானப் பயணக் கட்டணங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தலாம். இதன் விளைவாக, செப்டம்பர் 1ஆம் தேதியன்று புதிய விமான எரிபொருள் விலைகள் அறிவிக்கப்படலாம். CNG மற்றும் PNG விலைகளிலும் மாற்றம் ஏற்படலாம்.


டாடா கார்களின் விலை உயர்வு!

டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது அனைத்து கார்கள் மற்றும் SUV-களின் விலையை ரூ. 25,000 வரை உயர்த்துகிறது. இது செப்டம்பர் 1-முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வு ICE (எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள்) மற்றும் மின்சார வாகனங்கள் (EV) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். புதிய விலைகள் கார் மாடல் மற்றும் வகையைப் பொறுத்து மாறுபடும். டாடா நிறுவனத்தைத் தவிர, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுவும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


வங்கி FD வட்டி விகிதத்தில் மாற்றம்!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம். வட்டி விகிதங்கள் குறைந்தால் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வருமானம் சற்று குறையலாம். வட்டி விகிதங்கள் உயர்ந்தால் வாடிக்கையாளர்கள் பயனடையலாம். எனவே, FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் செப்டம்பர் 1ஆம் தேதி வரை காத்திருப்பது நல்லது. அன்றைய தினம் வட்டி விகிதங்கள் மாறினால் முதலீடு செய்வதற்கு முன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்கலாம்.


ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம்!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம். அடிக்கடி செய்யப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அதிக கட்டணம் வசூலிக்கலாம். எனவே, ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன், வங்கிகள் தங்களுடைய கட்டண வரம்புகளை மாற்றியமைக்கின்றனவா என்பதை அறிய செப்டம்பர் 1ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil