How to get better cooling from air cooler: கோடை காலத்தில் ஏர் கூலர்கள் சரியான குளிர் காற்றை தருவது கிடையாது.
இதற்கு தூசி படிதல், கூலிங் பேட் நனையவில்லை போன்ற பல காரணங்கள் உள்ளது. இதில் ஏர் கூலரை முறையாக சுத்தம் செய்து குளிர் காற்றை அதிகரிக்கும் வழிகளை பார்க்கலாம்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, மக்கள் தங்கள் வீடுகளுக்கு ஏசி அல்லது ஏர் கூலரை வாங்கி வருகிறார்கள். ஏசி வாங்க முடியாதவர்கள் பெரும்பாலும் கூலரை நம்பியே உள்ளனர். ஆனால், பல நேரங்களில் கூலர் சரியான குளிர் காற்றை தருவது கிடையாது. இதற்கு அதிகம் செலவழிக்க தேவையில்லை. முறையான பராமரிப்பு மற்றும் சில டிரிக் மூலம் எளிதாக குளிர் காற்றை பெற முடியும்.ஏர் கூலரில் குளிர்ந்த காற்று வராத காரணங்கள்

அமெரிக்க எரிசக்தி துறையின் தகவலின்படி, ஏர் கூலர்களில் காற்றோட்டம் தடைப்பட்டால் அல்லது கூலிங் பேட்களில் தூசி மற்றும் உப்பு படிமங்கள் சேர்ந்தால் அதன் குளிர்விக்கும் திறன் குறைய செய்யலாம்.
எனவே, கூலிங் பேட்களைத் தொடர்ந்து சுத்தம் செய்வதும், தண்ணீர் சுழற்சி சீராக இருப்பதை உறுதி செய்வதும் மிகவும் அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு ஏர் கூலரின் குளிர்ச்சியை அதிகரிப்பது மட்டுமின்றி மின்சாரத்தை கணிசமாக சேமிக்கவும் உதவும்.
ஏர் கூலர் சுத்தம் செய்யும் வழிகள்

- முதலில் பழைய தண்ணீரை வெளியேற்ற வேண்டும். நீண்ட நாட்களாக தேங்கியுள்ள தண்ணீர் பாக்டீரியா வளர்ச்சி மற்றும் கெட்ட வாடைக்கு வழிவகுக்கும்.
- அடுத்து, குளிரூட்டும் பட்டைகளை கழற்றி சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அவை அழுக்காக இருந்தால், தண்ணீரை சரியாக உறிஞ்சாது. குளிர்ச்சியான காற்றும் அளிக்க செய்யாது.
- பிறகு டேங்க்-ஐ மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும். இது கெட்ட வாடை நீக்குவதோடு காற்றின் தரத்தை மேம்படுத்தும்.
- பம்ப் சரியாக வேலை செய்கிறதா மற்றும் தண்ணீர் எடுத்துசெல்லும் குழாயில் அடைப்பு இருக்கா என்றும் சரிபார்க்க வேண்டும். மேலும் ஃபேன் பிளேட்-வும் துடைக்க வேண்டும். அழுக்கு இருந்தால் காற்றோட்டம் தடைப்படும்.
- இறுதியாக குளிரூட்டும் பட்டைகள் நன்றாக உலர்ந்த பிறகு மீண்டும் பொருத்திவிட்டு பிரஷ் வாட்டரை நிரப்ப வேண்டும்.
- கோடையில் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இப்படி சுத்தம் செய்தால், ஏர் கூலர் சிறப்பாக வேலை செய்யக்கூடும்.
ஏல் கூலர் குளிர்ச்சி அதிகரிக்க சில டிப்ஸ்

- வெப்பம் அதிகமாக இருந்தால் ஏர் கூலர் தொட்டியில் சில ஐஸ் கட்டிகள் அல்லது ஐஸ் வாட்டரை ஊற்ற வேண்டும். அவை கூலர் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம்.
- கூலர் இருக்கும் இடத்தில் ஜன்னல் மற்றும் கதவை லேசாக திறந்துவையுங்கள். இது அறையில் காற்றோட்டம் சீராக இருக்க உதவிப்புரியும்.
- ஏர் கூலரை நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கக்கூடாது. தொட்டியில் உள்ள நீர் சூடாகி, குளிர் காற்றை குறைத்துவிடும். கூலரை நிழல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
ஏர் கூலரில் கெட்ட வாடை நீக்கும் படிகாரம்

ஏர் கூலரில் இருந்து விரும்பத்தகாத வாசனை வரும் பட்சத்தில், சிறிது படிகார துண்டை தண்ணீர் நிரப்பிய தொட்டியில் போடவும். அது கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தமானதாக மாற்றும். ஏர் கூலரில் இருந்து குளிர்ச்சியான மற்றும் பிரஷ் காற்றும் வரக்கூடும்.
ஏர் கூலரில் காற்று சரியாக வரவில்லை என்றால், அது வேலை செய்யவில்லை என்று அர்த்தம் கிடையாது. முறையான பராமரிப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. நல்ல பராமரிப்பு கூலிங் மேம்படுத்துவதோடு ஏர் கூலர் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

