அஜித் தாயார் மரணம்: அஜித் குமார் தாயார் மோகனி மணி நேற்று காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்ததும் துபாயில் இருந்து சென்னை திரும்பினார் அஜித்.
தன் அம்மா இறந்த செய்தியை அஜித்தின் தம்பி அனீல் குமார் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார். மோகினியின் மறைவுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்று பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
விஜய்யோ இந்த கடினமான நேரத்தில் நண்பர் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல அவரின் வீடு தேடி வந்தார். விஜய் வருவது குறித்து அறிந்து வீட்டு வாசலிலேயே காத்திருந்து அவரை வரவேற்றார் அஜித் குமார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள்.
அஜித் குமார், விஜய் ரசிகர்களோ, தளபதி முதல்வரான பிறகு நண்பர்கள் இது போன்ற நேரத்திலா சந்திக்க வேண்டும். தைரியமாக இருங்க அஜித் சார். அம்மா, அப்பா எங்கும் செல்லவில்லை. உங்களுடன் தான் இருக்கிறார்கள். உங்கள் இதயத்தில் தான் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
விஜய் விவாகரத்து: முதல்வர் விஜய் வந்ததை விட்டுவிட்டு அவருடன் வந்த த்ரிஷா குறித்தே மக்கள் பேசுகிறார்கள். மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதால் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறி குடும்பநல நீதிமன்றத்திடம் விவாகரத்து கேட்டிருக்கிறார் சங்கீதா சொர்ணலிங்கம்.
அந்த வழக்கு ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. முன்னதாக விவாகரத்து மனுவில் சங்கீதா தெரிவித்த விபரங்கள் வெளியான நிலையில் தான் விஜய், த்ரிஷா ஒரே நிற உடை அணிந்து ஒரே காரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவே ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு அஜித் குமார் வீட்டிற்கு சேர்ந்து வரவே தற்போது மீண்டும் அவர்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. முன்னதாக மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தபோது விஜய் வீட்டிற்கு வந்தார் த்ரிஷா. அன்று அவரின் பிறந்தநாள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த பிரசாதம் கொடுக்க வந்தார் தலைவி என்றார்கள் விஜய் ரசிகர்கள்.
மே 10ம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் த்ரிஷா கிருஷ்ணன். விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கிற்குள் வந்ததும் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கையசைத்துவிட்டு விஜய் அம்மா ஷோபாவை கட்டிப்பிடித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார் த்ரிஷா. பதவியேற்பு விழாவுக்கு த்ரிஷா அணிந்த சேலை பிரபலமாகி அது விற்பனைக்கு வந்தது.த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு என்னொரு பரிசு என நடிகை ராதிகா சரத்குமார் வாழ்த்தவே அவரை விளாசினார்கள் ரசிகர்கள். அப்படியொரு கமெண்ட்டை பார்த்த ராதிகாவோ, நான் எதை சொன்னேன் என தெரியுமா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

