Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமெரிக்கா கொடுத்த பிரஷர்..கமேனியின் இறுதிச் சடங்கைப் புறக்கணித்த நாடுகள் - ரகசிய மெசேஜால் ஈரான் ஆவேசம்!

அமெரிக்கா கொடுத்த பிரஷர்..கமேனியின் இறுதிச் சடங்கைப் புறக்கணித்த நாடுகள் - ரகசிய மெசேஜால் ஈரான் ஆவேசம்!

Samayam Tamil 2 weeks ago

டந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அமெரிக்கா ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கூட்டு தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்

இதில் வான்வெளி தாக்குதலின் போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆன அயதுல்லா அலி கம்மேனி வயது 86 உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் இடையே போர் நீடித்து வருவதால் கமேனியின் உடல் அடக்கம் செய்வது ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஈரான் அமெரிக்கா உடைய போர் நிறுத்தம் ஒப்பந்தம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தாக்கி உள்ளது.


இந்த சூழலில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவர் கம்மெனியின் இறுதிச் சடங்கு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை தெஹ்ரானில் தொடங்கிய அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், புனித நகரமான கோம் வழியாக ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பாலா நகரங்களிலும் நடைபெற உள்ளன. இதையடுத்து, அவரது உடல் வரும் வியாழக்கிழமை மஷ்ஹாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயதுல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு

இந்த நிலையில் கம்மேனியின் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால்,இந்த இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்க விடாமல் அமெரிக்கா சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமெரிக்கா மிரட்டல் காரணமாக இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதில், சில ஐரோப்பிய நாடுகள் பின்வாங்கியுள்ளதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தர்ஷினி செய்து நிருவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது: கமேனி இறுதிச் சடங்குகள் தொடங்கி முதல் நாளில் பல உலக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இது அமெரிக்காவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இறுதிச்சடங்கில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பது தடுக்கும் முயற்சியில் அமெரிக்க தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல்

அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் வாயிலாக ஒரு ரகசிய செய்தி அனுப்பியுள்ளார். அதில் இறுதிச் சடங்கில் பங்கேற்றால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படலாம் என அந்த நாட்டு அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூன்று கிழக்கி ஐரோப்பிய நாடுகள் ஐந்து ஆப்பிரிக்க நாடுகள் இரண்டு வகை இரண்டு கிழக்கு ஆசிய நாடுகள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கம்னியின் இறுதி சடங்கில் எந்தெந்த நாடுகள் கலந்து கொண்ட விவரம் எதுவும் ஈரான் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தற்போது ரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடந்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil